ஹக்காரா

தேதி: December 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. எஸ். சுமதி அவர்களின் ஹக்காரா என்ற வட இந்திய உணவுக் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுமதி அவர்களுக்கு நன்றிகள்.

 

கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிது
சீரகம் - அரை தேக்கரண்டி


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அத்துடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும். அதன் மேல் ஒரு துணியை வைத்து அழுத்தவும்.
பிறகு அதை தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்தி போல் சுட்டெடுக்கவும்.
சுவையான ஹக்காரா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய கிச்சன் குயின் ஹேமா வாழ்த்துக்கள். அசத்தலான குறிப்புகள் எல்லாமே, ஒரு நாளோட மெனு மாதிரி இருக்கு 6 குறிப்பும். ஸ்வீட், குழம்பு, ஸ்நாக், டின்னர்க்கு வரை கொடுத்துருக்கீங்க ஹேமா. வாழ்த்துக்கள் ஹேமா இன்னும் பல குறிப்புகள் கொடுத்து அசத்த.

மிக்க‌ நன்றி செண்பகா, உங்கள் வாழ்த்து மேலும் எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கின்றது, தாமதமான‌ பதிலுக்கு மன்னிக்கவும்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா