கருணைக்கிழங்கு மசியல்

தேதி: December 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் கருணைக்கிழங்கு மசியல் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

கருணைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
புளி - கோலிக்குண்டு அளவு
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

தேவையானவற்றைத் தயாராக வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கருணைக்கிழங்கை குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வைத்திருந்து, 10 நிமிடங்கள் சிறு தீயில் வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் தோலை உரித்துவிட்டு மசித்துக் கொள்ளவும்.
மசித்தக் கிழங்குடன் புளியைக் கரைத்து ஊற்றி, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
அத்துடன் கருணைக்கிழங்கு கரைசலை ஊற்றி வேகவிடவும். கடாயில் துளி கூட ஒட்டாமல் சுருள வெந்து வந்ததும் இறக்கவும். கடாயில் ஒட்டினாற் போல் வந்தால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கிளறி ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.
சுவையான கருணைக்கிழங்கு மசியல் தயார்.

கருணைக்கிழங்கு மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்து.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vaazththukkal. congrats kitchen queen. supera iruku unga dish.

எல்லாம் சில‌ காலம்.....

இந்த‌ டிஷ் எனக்கு ரொம்ப‌ பிடிக்கும்.. படங்கள் அருமை..

"எல்லாம் நன்மைக்கே"