தயிர் குருமா

தேதி: December 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளித்த கொட்டித் தயிர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 4 பற்கள்
தனியா - அரை தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு, முந்திரி - தலா 5 கிராம்
கடுகு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியுடன் பூண்டு, தனியா, கசகசா, முந்திரி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்தவற்றைத் தயிருடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கியெடுத்து, தயிருடன் சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காய்கறிகளையும், தயிர் கலவையையும் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான தயிர் குருமா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Unga receipe colorfulla supera iruku.kandipa try pani pathutu solren.Have a good day kitchen queen.

வாழ்த்துக்கள் மெர்சி. அனைத்து குறிப்பும் சூப்பர்.

Be simple be sample

அக்கா உங்க படங்கள் அனைத்தும் சூப்பராக இருக்கு..பிரிண்ட் அருமையாக உள்ளது. ..கிச்சன் குயினுக்கு என்னுடைய சல்யூட். .....

அன்பு தோழி. தேவி

வாழ்த்துக்கள் மெர்சி கலர்ஃபுல் ரெசிபி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தங்கள் வாழ்த்துக்கு மிக்க‌ நன்றி. செய்து பாருங்க சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி சிஸ்டர்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ரொம்ப‌ ரொம்ப‌ தேங்ஸ்ப்பா !

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!