சிறுகிழங்கு பொரியல்

தேதி: December 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மாலதி அவர்களின் சிறுகிழங்கு பொரியல் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மாலதி அவர்களுக்கு நன்றிகள்.

 

சிறுக்கிழங்கு - கால் கிலோ
வரமிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 25
சிறு பற்களாக நறுக்கிய தேங்காய் - அரை கப்
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்


 

தேவையான‌ அனைத்தையும் தயாராக‌ எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி, சிறுகிழங்கைப் போட்டு அரை மணி நேரம் வைத்திருக்கவும். கிழங்கில் ஒட்டியிருக்கும் மண் முழுவதும் கரைந்து வந்துவிடும்.
பிறகு கிழங்கை நன்றாகக் கழுவிவிட்டு தோலைச் சீவி எடுத்துவிட்டு, ஆரஞ்சு சுளை போல நீளமாக நறுக்கி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிழங்கை வேக வைக்கவும்.
வரமிளகாய், சீரகம் இரண்டையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் தேங்காயை ஒன்றிரண்டாக தட்டி எடுத்து வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து, தட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேங்காயைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள வரமிளகாய், சீரகக் கலவை மற்றும் வேக வைத்த கிழங்கு சேர்த்து நன்றாகக் வதக்கி இறக்கவும்.
சுவையான‌ சிறுகிழங்கு பொரியல் தயார்.

இது ஒரு கேரள வகைப் பொரியல். இந்த கிழங்கு மார்கழி, தை மாதத்தில் மட்டும்தான் கிடைக்கும். செய்வது சற்றுச் சிரமமாக இருந்தாலும், இதன் ருசி மிகவும் அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்ர்ர்ர் ப்ரசண்டேசன் :) குறிப்பும் அருமை.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க‌ நன்றி சிஸ். எல்லா குறிப்புகளுமே எளிமைதான் ஆனால் சுவை மிகவும் அருமை .

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Kitchen queen all in all super

பாராட்டுக்கள்,ஆறு குறிப்பும் சூப்பர்.படங்கள் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.