சில்லி நண்டு - சைனீஸ் முறை

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நண்டு - அரை கிலோ
மிளகாய் விழுது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய பூண்டு - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

நண்டைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும்‌. தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். (சிறிதளவு சுடு தண்ணீரில் 5 காய்ந்த‌ மிளகாயைப் போட்டு கால் மணி நேரம் ஊற‌ வைத்து, பிறகு விதையை நீக்கிவிட்டு தோலை மட்டும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்தால் மிளகாய் விழுது கிடைக்கும். இது சைனீஸ் ஸ்பெஷல்).
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய பூண்டினைப் போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும். தண்ணீரின் அளவு நண்டு துண்டுகள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
அத்துடன் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பு கெட்டியாவதற்காக அதில் சோள மாவினைச் சேர்க்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும். சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் இறக்கிவிடவும்.
சுவையான சில்லி நண்டு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

//19.12.2014 கிட்சன் குயினுக்கு ஒரு விஷ் பண்ணி இருந்தா ரொம்ப‌ நல்லா இருந்து இருக்கும்.// :-)) விழாக்காலத்தில் வீட்ல விருந்தாளியையும் வைச்சுட்டு இங்க அதிக நேரம் உலவிட்டு இருக்க முடியாது இல்ல! உங்க கமண்ட் இன்றுதான் கண்ணில் பட்டது. இமா இங்கே யார் குறிப்பின் கீழும், 'கிச்சன் க்வீன் ஆகியதற்காக,' என்று வாழ்த்தியது இல்லை இதுவரை. குறிப்புக்கு கமண்ட் போட்டிருப்பேன். அதோட வாழ்த்தியிருக்கக் கூடும். நீங்க கேட்டுட்டீங்க. :-) உங்கள் ஆர்வம் புரியுது. தேதி தேடிப் பிடிச்சு வாழ்த்துகிறேன், வாழ்த்துக்கள் பாலநாயகி. :-) இன்னும் நிறைய சமைக்க வேண்டும். நிறைய தடவை கிச்சன் க்வீன் பட்டம் பெற வேண்டும். என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா டார்லிங்,

மத்த‌ எல்லார் விஷ் விட‌ உங்களோடது தான் பெருசா தெரியுது. எவ்ளோ பெரிய‌ ஆள் கிட்ட‌ இருந்து விஷ் கிடச்சி இருக்கு. (கேட்டு கிடச்சிதுன்றது வேற‌ விஷயம்). பாலா வெரி வெரி ஹாப்பி அண்ணாச்சி. தேங்க்ஸ் சொல்லி சிம்பிள் ஆக்க‌ விரும்பல‌. கண்டிப்பா நிறைய‌ செய்து அனுப்புவேன். ஆனா நிறைய‌ கிட்சன் குயின் வாங்கறது கஷ்டம். எத்தன‌ சீசன் இருக்கும்னு தெரிலயே. ஆனா கட்டாயம் எல்லாத்துலயும் கலந்துக்கறேன் டார்லிங். நான் உங்கள‌ டார்லிங்னு கூப்டலாம் இல்ல‌?

எல்லாம் சில‌ காலம்.....

//டார்லிங்னு கூப்டலாம் இல்ல‌?// :-) வெறும் இமா போதும் பாலநாயகி. நீங்கள் கேட்கும் முன்பே உங்கள் ஒரு பதிலின் கீழ் சொல்லியிருந்தேன். ஸ்ட்ராபெரி ஜாம் குறிப்பில் என்று நினைவு. நீங்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது. நான் செய்த எந்தக் காரியம் உங்களை இப்படி அழைக்க வைக்கிறது என்று தெரியவில்லை. இதற்கு நீங்கள் காப்பிரைட் எல்லாம் வாங்கி வைக்க முடியாது. :-) நீங்கள் ஆரம்பித்து வைக்க, தொடர்ந்து இங்கு புதிதாக இணைபவர்களும் கூப்பிட ஆரம்பித்தால் எனக்குச் சங்கடமாக இருக்கும். உலகம் முழுவதும் இருப்பவர்கள் பார்க்கும் இடம் இது. அப்படி அழைப்பதில் தப்பு எதுவும் இல்லைதான். ஆனால் பார்ப்பவர்களுக்கு நீங்கள் என்னை கேலி செய்வது போலவும் தோன்றச் சாத்தியம் இருக்கிறது. உங்கள் அன்பு புரிகிறது எனக்கு. இருந்தாலும் டார்லிங் வேணாம். நான் வெறும் இமாவாக மட்டும் இருக்க விரும்புகிறேன். நிச்சயம் புரிந்துகொள்வீர்கள். இப்பொழுதே என் அன்பு நன்றிகள்.

//எவ்ளோ பெரிய‌ ஆள் கிட்ட‌ இருந்து// ஆஹா! :-) இமா பெரிய ஆள் எல்லாம் கிடையாது. ரொம்..பக் குட்டி ஆள் தெரியுமா!! :-)

‍- இமா க்றிஸ்