ஜவ்வரிசி புலாவ்

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. M.S. சிவாம்பிகை அவர்களின் ஜவ்வரிசி புலாவ் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சிவாம்பிகை அவர்களுக்கு நன்றிகள்.

 

ஜவ்வரிசி - ஒரு கப்
வேர்க்கடலை - 50 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கேரட் - 2
உருளைக்கிழங்கு - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
தயிர் - ஒரு கப்
பனீர் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க‌:
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

முதலில் ஜவ்வரிசியில் ஒரு கப் தயிர் மற்றும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 45 நிமிடங்கள் ஊற வைக்கவும். தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாட்டில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட், உருளைக்கிழங்கு மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்.
அத்துடன் ஊற வைத்த ஜவ்வரிசி மற்றும் ஒன்றிரண்டாக‌ உடைத்து வைத்துள்ள வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, பனீரைப் போட்டு பொரித்து, குளிர்ந்த‌ நீரில் போட்டு எடுத்து ஜவ்வரிசியுடன் சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
சுவையான‌ ஜவ்வரிசி புலாவ் ரெடி.

பனீரை எண்ணெயில் பொரித்த உடன் குளிர்ந்த‌ நீரில் போட்டு வைத்தெடுத்தால் சாஃப்டாக இருக்கும்.

ஜவ்வரிசி ஊறுவதற்கு அதிக நேரம் எடுக்கும். நன்றாக ஊறிவிட்டால் 15 நிமிடங்களில் இந்தப் புலாவை செய்துவிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க் யூ முன்னாள் கிட்சன் குயின். இது ரொம்ப‌ வித்யாசமா சூப்பரா இருந்துச்சி. செய்து பாருங்க‌. இதை செய்து காட்டின‌ சிவகாம்பிகை அம்மாக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும். சுலபமான‌ அருமையான‌ குறிப்பு இது.

எல்லாம் சில‌ காலம்.....

சிம்பிள் அண்ட் டேஸ்டி ரெசிபி... நேரம் கிடைக்கும்போது செய்து பார்க்கிறேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கிச்சன் குயின் பாலநாயகிக்கு வாழ்த்துக்கள். குறிப்புகள் அனைத்துமே ரொம்ப‌ சூப்பரா இருக்கு. முதல் முறை கொடுப்பது போலவே தெரியல‌ படங்கள் எல்லாமே பளிச் பளிச். தொடர்ந்து குறிப்புகள் கொடுக்க‌ வாழ்த்துக்கள்

நன்றி கனி. இது உண்மையா சூப்பரா இருந்துச்சி. இங்க‌ வீட்டுக்கு பக்கத்துல‌ இருக்கவங்க கூட‌ ரொம்ப‌ பாராட்னாங்க‌. ஜவ்வரிசி ஊற‌ வெச்சிட்டா போதும். ரொம்ப‌ சீக்கிரம் முடிச்சிடலாம். ரொம்ப‌ ஈஸி.

எல்லாம் சில‌ காலம்.....

எப்டி இருக்கீங்க‌. நீங்க என் ரெசிபிக்கு கமென்ட் குடுக்கறது சந்தோஷமா இருக்கு. நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....