ஆமை வடை

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பாக்கியம் அவர்களின் ஆமை வடை குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பாக்கியம் அவர்களுக்கு நன்றிகள்.

 

கடலைப்பருப்பு - அரை கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - 6
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 கப்


 

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இவை மூன்றையும் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் நீரை வடித்துக் கொள்ளவும்.
ஊறிய பருப்பு வகைகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்தெடுத்த பருப்புக் கலவையுடன் லேசாக உடைத்த மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துப் நன்றாகப் பிசையவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரு வாழை இலையில் வைத்து வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான ஆமை வடை ரெடி. இதில் இடது புறம் இருக்கும் 2 வடைகள் மட்டும் காய்கள் சேர்க்காமல் செய்துள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயின்ஸ் எல்லாருமே கிழி கிழி தான், செம்மையா இருக்கு எல்லாமே, படங்கள், ப்ரசண்டேஷன்,டெக்ரேஷன் எல்லாமே எல்லோருமெ சூப்பரா செஞ்சிருக்கீங்க.

இந்த‌ கிச்சன் குயின்ஸ் கைகளுக்கெல்லாம் வீட்ல‌ எதாவது போட்டாங்களா? இல்ல‌ எதாவது நல்லா செஞ்சா இத‌ செஞ்ச‌ தங்க‌ கைக்கு தங்க‌வளையல் போடணூம்னு சொல்லுவாங்க‌ இல்ல‌ அது மாதிரி எதாவது போட்டாங்களான்னு கேட்டேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌. நான் சொல்ல மறந்தது விட்டது எல்லாம் கரெக்டா பாத்து போட்டு வாழ்த்துகளும் சொன்னதுக்கு ரொம்ப‌ ரொம்ப‌ தேங்க்ஸ். தேங்க் யூ சோ மச். குறிப்பு உங்களோடது. குறிப்ப‌ குடுத்து செய்து காட்னதுக்கு பாராட்டும் கிட்சன் குயின் பட்டமும் குடுத்து அசத்துறீங்க‌. மிக்க‌ நன்றி. நெஞ்சார்ந்த‌ நன்றிகள்.

உண்மையா என்ன‌ இதுல‌ கலந்துக்க‌ உற்சாக‌ படுத்தனது வனி அக்கா மட்டும் தான். தாங்க்ஸ் வனி அக்கா. உங்களையும் சீதா அம்மாவையும் பாத்து தான் எனக்கு இன்ட்ரெஸ்ட் வந்துச்சி. ஆனா குறிப்பு அனுப்பும் வழி தெரியாமல் இருந்தேன். இந்த‌ கிட்சன் குயின் எனக்கு உதவியாக‌ இருந்தது.

என்னோட‌ முதல் முயற்சிக்கே இந்த‌ பாராட்டும் கிட்சன் குயின் பட்டமும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அருசுவை டீம்ல‌ இருக்க‌ அனைவருக்கும் நன்றி.

இந்த‌ கிட்சன் குயின் பட்டம் கிடைத்தது எனக்கு தேசிய‌ விருது வாங்கின‌ மகிழ்ச்சி கிடைக்குது. வீட்டை விட்டு வெளியில் நான் வாங்குகிற‌ முதல் பாராட்டு இது. கண்ல‌ தண்ணீயே வருது. சொல்ல வேற‌ வார்த்தையே இல்லை. தேங்க் யூ சோ மச் டூ ஆல்.

எல்லாம் சில‌ காலம்.....

thank u so much. தங்கத்துக்கு எதுக்கு தங்க‌ வளையல்னு வழக்கமான‌ மழுப்பற‌ dialog சொல்லி எஸ்கேப் ஆயிட்டாங்க‌பா.

எல்லாம் சில‌ காலம்.....

நண்டு மசாலாவில் நண்டு இருந்தது... ஆமை வடையில் ஆமையை காணோமே??? முழுங்கிட்டீங்களோ படம் எடுக்கும் முன்?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமை அந்த‌ வடைக்கு நடுல‌ இருக்கு. நம்ப‌ முடிலனா வடையை பிச்சி பாருங்க‌. உள்ள‌ தான் மேஞ்சிட்டு இருக்கு. வெளில‌ வற‌ லேட் ஆச்சி. அதுக்குள்ள‌ நான் ஃபோட்டோ எடுத்துட்டேன். இந்த‌ ரேஸ்லயும் ஆமை வெளில‌ வராம‌ தோத்து போச்சி.

எல்லாம் சில‌ காலம்.....

பாலநாயகி,
வாழ்த்துக்கள்
அழகான படங்கள்..அத்தனையும் அருமை..

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவி

எல்லாம் சில‌ காலம்.....

ஆமை வடை செய்துப் பார்த்தேன், காய்கறிகள் சேர்த்து சுவை சூப்பரா வித்தியாசமாக இருந்தது. மெர்ஸியின் புதினா டீயுடன் நல்ல காம்பினேஷன்.
நன்றி

நன்றி வாணி

எல்லாம் சில‌ காலம்.....