தட்டப்பயறு மசாலா

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் வழங்கியுள்ள தட்டப்பயறு மசாலா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

தட்டப்பயறு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - ஒன்று
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டுகள்
கிராம்பு - 2
சோம்பு - கால் தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

பயறை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வேக‌ வைத்த‌ தண்ணீரைத் தனியாக வடிகட்டி எடுத்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி பேஸ்ட் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
பிறகு வேக வைத்த பயறைச் சேர்த்து, பயறு வேக‌ வைத்த‌ தண்ணீரையும் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். (பயறு வேக வைக்கும் போதும் உப்பு சேர்த்திருப்பதால், உப்பின் அளவை சரிபார்த்துச் சேர்க்கவும்).
கொதித்ததும் கரம் மசாலாத் தூள் மற்றும் நெய் சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு இறக்கவும். (கரம் மசாலா சேர்த்ததும் வரும் மணம் மிகவும் நன்றாக இருக்கும்).
சுவையான தட்ட‌ப்பயறு மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தட்ட‌ப்பயறு மசாலா ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. ரொம்ப ஈசியான செய்முறையாகவும் இருக்கு. வாழ்த்துகள் பாலநாயகி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹெல்தி தட்டைபயறு மசாலா.. எளிமையான‌ செய்முறை..

"எல்லாம் நன்மைக்கே"

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்புகள் அனைத்தும் அருமை. மேலும் குறிப்புகள் வழங்க‌ வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌. நான் சொல்ல மறந்தது விட்டது எல்லாம் கரெக்டா பாத்து போட்டு வாழ்த்துகளும் சொன்னதுக்கு ரொம்ப‌ ரொம்ப‌ தேங்க்ஸ். தேங்க் யூ சோ மச். குறிப்பு உங்களோடது. குறிப்ப‌ குடுத்து செய்து காட்னதுக்கு பாராட்டும் கிட்சன் குயின் பட்டமும் குடுத்து அசத்துறீங்க‌. மிக்க‌ நன்றி. நெஞ்சார்ந்த‌ நன்றிகள்.

உண்மையா என்ன‌ இதுல‌ கலந்துக்க‌ உற்சாக‌ படுத்தனது வனி அக்கா மட்டும் தான். தாங்க்ஸ் வனி அக்கா. உங்களையும் சீதா அம்மாவையும் பாத்து தான் எனக்கு இன்ட்ரெஸ்ட் வந்துச்சி. ஆனா குறிப்பு அனுப்பும் வழி தெரியாமல் இருந்தேன். இந்த‌ கிட்சன் குயின் எனக்கு உதவியாக‌ இருந்தது.

என்னோட‌ முதல் முயற்சிக்கே இந்த‌ பாராட்டும் கிட்சன் குயின் பட்டமும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அருசுவை டீம்ல‌ இருக்க‌ அனைவருக்கும் நன்றி.

இந்த‌ கிட்சன் குயின் பட்டம் கிடைத்தது எனக்கு தேசிய‌ விருது வாங்கின‌ மகிழ்ச்சி கிடைக்குது. வீட்டை விட்டு வெளியில் நான் வாங்குகிற‌ முதல் பாராட்டு இது. கண்ல‌ தண்ணீயே வருது. சொல்ல வேற‌ வார்த்தையே இல்லை. தேங்க் யூ சோ மச் டூ ஆல்.

எல்லாம் சில‌ காலம்.....

ஒரு முன்னாள் கிட்சன் குயின் எனக்கு விஷ் பண்ணி இருக்கீங்க‌. ரொம்ப‌ மகிழ்ச்சியா இருக்கு. மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

மிக்க‌ நன்றி. நீங்களும் செய்து பாருங்க‌. சப்பாத்திக்கு ரொம்ப‌ நல்லா இருன்ந்துச்சி.

எல்லாம் சில‌ காலம்.....

மிக்க‌ நன்றி முன்னாள் கிட்சன் குயின். உங்க‌ லைன் சூப்பரா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

இன்றைய கிச்சன் குயினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) சத்தான ரெசிபி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாலு, அப்டி கூப்டலாமா? பாலநாயகி தான‌. பாலு ஹஸ் பெயர் இல்லீலப்பா?
மசாலா அருமை. ப்ரசன்டேசன் அதையும் விட‌ அருமை. வாழ்த்துக்கள் டியர்.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

என் பெயர் தான் பாலநாயகி. இங்க‌ பால்'ஸ்னு கூப்டுவாங்க‌. நீங்க‌ பாலுனு கூட‌ கூப்டலாம். என் ஹப்பி பேரு தமிழ் வேந்தன். நன்றிகள் பல‌ டார்ல்ஸ். ஒரு டவுட். நீங்க‌ கேட்டிங்கனு நான் கேக்கறனு நினைக்காததீங்க‌. கிருஷ்ணா உங்க‌ பேர் தானா? இல்ல‌ ஹப்பி பேரா?

எல்லாம் சில‌ காலம்.....

thank u so much kitchen queen.

எல்லாம் சில‌ காலம்.....

கிருஷ்ணா ஹஸ்பண்ட் பெயர்தான்பா. நானும் பால்ஸ் யே வழிமொழிகிறேன் பா!
நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி மெர்சி.

எல்லாம் சில‌ காலம்.....