பாசிப்பருப்பு சுக்கா

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
கடுகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
அரைக்க :
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 2


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிப்பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்து, குக்கரில் போட்டு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 6 விசில் வரும் வரை நன்கு குழைய வேகவிடவும்.
அடுப்பில் வாணலி்யை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, சீரகம் போட்டு பொரிந்தவுடன், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, பிறகு மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான மற்றும் சத்தான பாசிப்பருப்பு சுக்கா ரெடி. சப்பாத்தி, சாதம், இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

பாசிப்பருப்பில் புரதச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சிறிது நெய் விட்டு சாதம், தோசை ஆகியவற்றுடன் கொடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். விரும்பிச் சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹேமா கன்டிப்பா செய்யனும் வித்தியாச்மா பாசிபருப்பில் கன்டிப்பா நீங்க சொல்ராப்போல குழந்தைங்களுக்கு நல்ல உனவு வாழ்த்துக்கள்

சூப்பரான ரெசிபி.நான் என் பையனுக்கு செய்து கொடுக்கிறேன் அக்கா. .......

அன்பு தோழி. தேவி

ஹேமா சுக்கா நல்லாருக்கு நானும் இதே முறையில் தான் செய்வேன் அரைக்கும் பொருளில் சிறிதளவு தேங்காய் சேர்ப்பேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

supera irukku. nanum idhai adikadi seiven idly dosai chappathi ku thottu kolla super side dish idhu.

எல்லாம் சில‌ காலம்.....