ப்ரெட் பீட்ஸா

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோதுமை ப்ரெட் துண்டுகள் - 4
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் (பச்சை, சிவப்பு) - பாதி
சில்லி ப்ளேக்ஸ் - தேவைக்கேற்ப
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
துருவிய சீஸ் - அரை கப்
பட்டர் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ்
உப்பு - தேவைக்கேற்ப.
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, பிறகு குடைமிளகாய் போட்டு சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கியெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து காய்ந்தவுடன் பட்டர் போட்டு, அதில் ப்ரெட் துண்டுகளைப் போட்டு இரு புறமும் திருப்பி்ப் போட்டு டோஸ்ட் செய்யவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து ப்ரெட்டின் மேல் தக்காளி சாஸ் தடவவும். அதன் மேல் வதக்கிய கலவையை வைத்து, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி சிறிது நேரம் கழித்து சீஸைத் தூவி இறக்கவும்.
சுவையான மற்றும் சத்தான ப்ரெட் பீட்ஸா ரெடி.

அவன் வைத்திருப்போர் ரெடியான பீட்ஸாவை 3 முதல் 4 நிமிடங்கள் அவனில் வைத்தெடுத்தால், மேலே தூவி இருக்கும் சீஸ் உருகி நன்றாக இருக்கும்.

மேலும் கடையில் வாங்கிச் சாப்பிடும் பீட்ஸாவைவிட இது உடலுக்கு நல்லது. இதற்காக ஆகும் செலவும் குறைவு. வீட்டிற்கு விருந்தினர் வரும் போதோ அல்லது குழந்தைகள் மாலை நேரம் பள்ளியில் இருந்து வரும் போதோ செய்து கொடுத்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்ஃபுல் ஹெல்தி டிஷ் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்க‌ அழகா இருக்கு... பீட்சா சாப்பிடலைனு கவலையே வெண்டாம்.. இதை சாப்பிடும் போது...

simply super dish. vazhthukkal. kalakkala irukku.

எல்லாம் சில‌ காலம்.....

பீட்ஸா சூப்ப்ர். குழந்தைங்களுக்கு நல்ல‌ மாலை நேர‌ உணவு. நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

கலக்குரீங்க‌ ஹேமா.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ப்ரெட் பீட்ஸா குறிப்பு வந்திட்டு ஈசியா இருக்கு.வாழ்த்துக்கள்