மஷ்ரூம் டிக்கா

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மஷ்ரூம் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2 (நடுத்தரமான அளவு)
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி மற்றும் புதினா இலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சர்க்கரை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மஷ்ரூமைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டு மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
2 பெரிய வெங்காயத்தை நறுக்கி வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனுடன் 2 தக்காளியையும் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து சிவக்க வதங்கவிடவும்.
நன்றாக வதங்கியதும் மஷ்ரூம் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதங்கவிடவும்.
வதங்கிய பிறகு வெங்காயம், தக்காளி விழுதை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
லேசாகக் கொதித்ததும் பச்சை மிளகாய் விழுதை ஊற்றி, உப்பு சரிபார்த்து மீண்டும் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து பிரட்டல் பத‌த்திற்கு வந்ததும், கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்துச் சேர்த்துப் பிரட்டி இறக்கவும்.
சூடான, சுவையான மஷ்ரூம் டிக்கா ரெடி. புலாவ் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட‌ அருமையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டிக்கா கலக்கலா இருக்குங்க‌. அவசியம் செய்து பார்க்கிறேன்.
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

supera செய்து இருக்கீங்க‌. நான் கண்டிப்பா ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

டிக்கா சூப்பர்ங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அந்த ப்ளேட் எனக்கு அப்படியே தாங்க திரும்ப பசிக்குது பார்க்கும் போதே சாப்பிட தோணுது

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்