கர்நாடகா வடை

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
மிளகு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிய கட்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

உளுந்தில் தன்ணீர் ஊற்றி, சுமார் 6 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.
கொத்தமல்லித் தழையையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உளுந்து ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு, மிளகு சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு உளுந்து மாவுடன் கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மாவினை வடைகளாகத் தட்டிப் போடவும். தீயை மிதமாக வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
ஈஸி & டேஸ்டி கர்நாடகா வடை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இஞ்சி டீயோட‌ சாப்டா சூப்பரா இருக்குமே குளிருக்கு...
நல்ல‌ தெளிவா இருக்குங்க‌ உங்க‌ படங்கள் எல்லாம்... சூப்பர்!!

கவிதாசிவகுமார்.

anbe sivam

வனி சூப்பர் மைசூர்போன்டா என்கனவருக்கு ரொம்பபிடிக்கும் நான் அடிக்கடி செய்யும் போன்டா வாழ்த்துக்கள்.இதுல கொஞ்சம் ஜீரகம் பெருங்காயதூள் கடலைமாவு 1ஸ்பூன் கலந்து சுடுவேன் மொறுமொறுப்பாயிருக்கும்

வடை சூப்ப்ர் சிஸ். எளிமையாகவும் இருக்குது.
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

வடை ஈஸியாக இருக்கு...எப்படி அக்கா இப்படி கலக்குறீங்க....

அன்பு தோழி. தேவி

ரொம்ப ஈசியா இருக்குதே இன்னைக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ரெடி பண்ணவேண்டியதுதான் ஈவனிங் வந்து. வடை எப்படி வந்ததுனு சொல்றேன் bye by dhana

வனி வடை செம கும்முன்னு அம்சமா போஸ் குடுக்குது ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி கர்நாடகா வடை குஷ்பு வடை மாதிரி கும்முன்னு இருக்கு.. பார்க்கவே சூப்பரா இருக்கு.. எனக்கு பார்சல் ப்ளீஸ்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஈசியாவும் வித்தியாசமாவும் இருக்கு.ஒரு நாள் செய்து பார்த்து சொல்லுறேன்..

வனி வடை சூப்பரா படங் காட்டுது. வெங்காயம் போடாத‌ எந்த‌ அயிட்டம்னாலும் எங்க‌ வீட்டு குயினுக்கு இஷ்டம், செய்துட்டு நானும் படங்காட்டுறேன்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆங்... இப்ப தான் சரியான இடத்துல சொல்லி இருக்கேன் ;) நன்றி டீம் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதாசிவகுமார், நிசா, மெர்சி, தேவி, தனா, சுவா, ரேவதி, தர்ஷா, சுமி... அனைவருக்கும் நன்றி :) டீம் குறிப்பு, நம்ம ஊர் குறிப்பா இருக்கேன்னு நான் எடுத்து செய்தேன். அவசியம் செய்து பாருங்க, செய்ய சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. குறிப்பை கொடுத்த டீம்க்கு நன்றி :)

தீபம் அன்று படைக்க அவசரமாக செய்ததால் குஷ்பு போல கொஞ்சம் உப்பி போச்சுது ;) மெதுவா தட்டி பொரிக்க நேரமில்லை. நிஷா... போண்டா குறிப்பே வேறு, இது வடை. செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா