இறால் அவரை பொரியல்

தேதி: December 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

திருமதி. ஜுலைஹா அவர்களின் இறால் அவரை பொரியல் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

இறால் - 10 (பெரியது)
அவரைக்காய் - 10
வெங்காயம் - ஒன்று
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

அவரைக்காயை மெல்லிய சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய இறாலாக இருப்பதால் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றிக் கிளறிவிட்டு, இறாலைச் சற்று நேரம் வேகவிடவும்.
தண்ணீர் வற்றி இறால் அரை வேக்காடு வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் அவரைக்காயைச் சேர்த்து பிரட்டவும்.
நன்றாகப் பிரட்டிவிட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். இறால் வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான இறால் அவரை பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரெசிபி செம டெம்ப்டிங்.... அடுத்த டைம் நா அங்க வரப்போ கண்டிப்பா செய்து தரணும் டீல் ஓகேயே... இன்னைக்கு செய்துட்டு நாளைக்கு வந்து சொல்லுறேன் எப்படி இருந்துச்சுன்னு :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள்....

எல்லா குறிப்புமே அருமையாக‌ செய்துகாட்டியிருக்கீங்க‌!! சூப்பர்ங்க‌...

இறால், அவரைக்காய் காம்பினேஷன் அசத்தல்!

நேற்று இரவு இந்த‌ ரெஇச்பி செய்து சாப்பிட்டாச்சு... டேஸ்ட் சூப்பரோ சூப்பர்.. அம்மா தாங்க்ஸ் சொல்ல‌ சொன்னாங்க‌ பாப்பி அக்கா..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நிச்சயம் செய்து தந்திடலாம் நீங்க வாங்க. அம்மாக்கு தாங்ஸ் சொல்லுங்க கனி.
அனு வாழ்துக்களுக்கு நன்றி.