முட்டை குருமா சமையல் குறிப்பு - படங்களுடன் - 30175 | அறுசுவை


முட்டை குருமா

வழங்கியவர் : prabashivaraj
தேதி : செவ்வாய், 23/12/2014 - 09:52
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
3
2 votes
Your rating: None

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் முட்டை குருமா குறிப்பு, சில மாற்றங்கள் செய்து, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

 • முட்டை - 6
 • வெங்காயம் - 100 கிராம்
 • தக்காளி - 5
 • பச்சை மிளகாய் - 5
 • இஞ்சி, பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
 • தேங்காய் - ஒரு மூடி
 • பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
 • முந்திரி - 5
 • ஏலக்காய் - 3
 • பட்டை - 2
 • கிராம்பு - ஒன்று
 • அன்னாசிப்பூ - 2
 • சோம்பு - ஒரு தேக்கரண்டி
 • கசகசா - ஒரு தேக்கரண்டி
 • மல்லித் தூள் - 3 மேசைக்கரண்டி
 • மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
 • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
 • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
 • உப்பு - 2 தேக்கரண்டி
 • தாளிக்க:
 • சோம்பு - அரை தேக்கரண்டி
 • வெந்தயம் - அரை தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - சிறிது

 

பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி முட்டைகளைப் போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீரில் போட்டு ஓட்டை நீக்கிக் கொள்ளவும்.

தேங்காயுடன் பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டுத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பிறகு அரைத்தவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொதித்ததும் வேக வைத்த முட்டைகளைப் போட்டு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான முட்டை குருமா தயார்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..விஜி

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். ஈசி அன்ட் டேஸ்டி முட்டை குருமா.. படங்களும் தெளிவா இருக்கு. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பிரபா..

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். அனைத்து குறிப்புகளும் சூப்பர்.. படங்கள் அனைத்தும் அருமை.. வாழ்த்துகள் பிரபா.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நன்றி..நன்றி...நன்றி

நன்றி, அட்மின் மற்றும் அறுசுவை டீம்.
குறிப்பு கொடுத்த சரஸ்வதி அவர்களுக்கும் நன்றி:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

sumi,reva

நன்றி சுமி,ரேவ்:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

பிரபா

ரொம்ப நாட்களுக்கு பின் உங்க பதிவுகள் பார்த்ததே அளவில்லா மகிழ்ச்சி... இதுல கிச்சன் குயினா மகுடம் சூட்டி முகப்புல பார்க்குறதுன்னா??? சொல்லவே வேண்டாம்... வெரி வெரி ஹேப்பி :) வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பிரபா. ஒரு இனிப்பு குறிப்பு இருந்தா பதிவு போடலாம்னு தேடினேன், அது கிடைக்கல, அதான் இங்க ;) எல்லா குறிப்பும் அருமை, தொடர்ந்து வரும் பகுதிகளில் கலக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரபா

கலக்கல் குறிப்புகள் எல்லாமே. அழகா அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

பிரபா

இன்றைய கிச்சன் குயின் பிரபாவுக்கு வாழ்த்துக்கள் அனைத்து குறிப்புகளும் அமர்க்களம் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பிரபா சிஸ்

முட்டை குருமா பிரமாதம். கிச்சன் குயின் அவர்களே வாழ்த்துக்கள்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

vani

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வனி,இந்த மாதிரி போட்டி அறிவித்து குறிப்பெல்லாம் தேர்ந்தெடுத்து கொடுத்த உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

thanks

வாழ்த்து தெரிவித்த பாலநாயகி,சுவா,மெர்சி அனைவருக்கும் நன்றிகள்:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.