இஞ்சி தயிர் பச்சடி

தேதி: December 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் இஞ்சி தயிர் பச்சடி குறிப்பு, சில மாற்றங்கள் செய்து, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தேங்காய்த் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
அதிகம் புளிக்காத தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சியுடன் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
கொத்தித்ததும் எடுத்து ஆறவிட்டு, தயிருடன் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான இஞ்சியின் மணமுள்ள தயிர் பச்சடி தயார். சாம்பார் சாதத்துடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் சேர்க்கும் போது பச்சடி நீர்த்துவிடும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈசியான‌ குறிப்பினை கொடுத்த‌ எங்கள் அறுசுவைத் தோழி கவிக்கு எனது நன்றிகள். செம‌ டேஸ்ட் கவி....தேங்ஸ் ஒன்ஸ் மோர்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இஞ்சி தயிர் பச்சடி உளுக்கு அல்கா பணியாரம் இரண்டுமே சூப்பர்மா.. வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் சூப்பர். அருமையா இருக்கு அனைத்து குறிப்பும். வாழ்த்துகள் மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்கள் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த‌ நன்றிகள் ரேவா..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பச்சடி பாக்கவே அருமையா இருக்கு சுமி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//பச்சடி பாக்கவே அருமையா இருக்கு சுமி :)// அதுக்கு குறீப்பு கொடுத்டஹ் கவிக்கு தான் நான் நன்றி சொல்லனும். பதிவுக்கு நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....