ஜெய்பூரி ஆலு

தேதி: December 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நாகா ராம் அவர்களின் ஜெய்பூரி ஆலு குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய நாகா ராம் அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - அரை கப்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கைத் தோல் சீவி மெல்லிய வட்ட துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்த் தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு வில்லைகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
ஈஸி & டேஸ்டி ஜெய்பூரி ஆலு ரெடி. கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

இதே முறையில் உருளைக்கிழங்கிற்கு பதிலாக வெண்டைக்காயிலும் செய்யலாம். குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக செய்து அசத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்வதற்க்கு சுலபமான‌ குறிப்பினை கொடுத்த‌ திருமதி. நாகா ராம் அவர்களுக்கு எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆலு ஆலு ஆலு ஆலு தூளு தூளு தூளு தூளு.. சூப்பர் குறிப்பு சுமி.. வாழ்த்துகள்.. ரொம்ப ஈசியா இருக்கு செய்முறை.. படங்கள் அனைத்தும் தூள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

//ஆலு ஆலு ஆலு ஆலு தூளு தூளு தூளு தூளு// இத‌.. இத‌.. இந்த‌ பாட்ட‌த்தான் நான் எதிர்பார்த்தேன் ரேவாகிட்ட‌ இருந்து.. ஆமா ரேவ், செய்யவும் சுலபம், டேஸ்ட்டும் சூப்பர். ஜெட் வேகத்தில் செய்து அசத்தக் கூடிய‌ ஈவினிங் ஸ்னாக் ரேவா. செய்து பாருங்க‌..:) நன்றி..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருமையான குறிப்புகள்.வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் தர்ஷா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி ஜெய்பூரி ஆலு சூப்பர் எளிமையான ஸ்நாக் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் சுவா..:) ட்ரை செய்துட்டு சொல்லுங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....