சாய்துக்ரா

தேதி: December 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. V. வித்யாலெட்சுமி அவர்கள் வழங்கியுள்ள சாய்துக்ரா என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வித்யாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரெட் - ஒரு பாக்கெட்
பால் - அரை லிட்டர்
சீனி - 400 கிராம்
குங்குமப்பூ - கால் தேக்கரண்டி
முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 6


 

தேவைப்படும் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கிவிட்டு, அதனை தவாவில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக வாட்டி எடுக்கவும்.
பாலை நன்றாகக் காய்ச்சவும். பால் நன்கு காய்ந்ததும் அதில் சீனியையும், குங்குமப்பூவையும் சேர்த்து மீண்டும் பால் நன்கு சுண்டும் வரை காய்ச்சவும்.
நன்கு சுண்டிய பாலை ப்ரெட் துண்டுகளின் மீது ஊற்றி ஊற வைத்து, துருவிய பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து பரிமாறவும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய எளிமையான இனிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுமி,இப்போதுதான் உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன். ரொம்ப‌ நல்லா வந்திருக்கு சாய்துக்ரா. வாழ்துக்கௗ்.

அன்புடன்
பாரதி வெங்கட்

இன்றைய கிச்சன் குயின் சுமிபாபுக்கு என் வாழ்த்துக்கள்.எல்லாமே அருமை

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்றிருக்கும் சுமிக்கு வாழ்த்துக்கள்.

அறுசுவை டீமிற்க்கு எனது நன்றிகள்..:) குறிப்பினை கொடுத்த‌ திருமதி. V. வித்யாலெட்சுமி அவர்களுக்கு எனது மனமார்ந்த‌ நன்றிகள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள் பாரதி..//ரொம்ப‌ நல்லா வந்திருக்கு சாய்துக்ரா.// செய்வது ரொம்ப‌ சுலபம் பாரதி..ட்ரை செய்து பாருங்க‌.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றிகள் நிஷா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

உங்கள் வாழ்த்துக்கு எனது நன்றி அண்ணி.. செய்து பாருங்க‌.. நவீனாக்குட்டிக்கு ரொம்ப‌ பிடிக்கும்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சாய்துக்ரா கண்டுபிடிக்கிறாங்கய்யா நல்லா பேரா.. சுமி இதுக்கு என்னம்மா அர்த்தம். சூப்பர் செய்முறை சுமி.. படங்கள் ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்கு.. வாழ்த்துகள் சுமி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

//சாய்துக்ரா கண்டுபிடிக்கிறாங்கய்யா நல்லா பேரா.. சுமி இதுக்கு என்னம்மா அர்த்தம்// பேரு சத்தியமா நான் வைக்கல அம்மிணி.. பேருல என்ன இருக்கு, டேஸ்ட் இருந்தா போதாதா நமக்கு..;) உங்க பாராட்டுக்கு டபுள் தேங்ஸ்ங்கோ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்றிருக்கும் சுமிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எனது மனமார்ந்த‌ நன்றிகள் தோழியே..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....