மசாலா லெஸி

தேதி: December 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மகாலெட்சுமி ப்ரகதீஷ்வரன் அவர்களின் மசாலா லெஸி குறிப்பு , விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

புளித்த தயிர் - 2 கப்
பால் - ஒரு கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சீரகத்தை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.
மிக்ஸியில் தயிருடன் பால், சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
குழந்தைகள் விரும்பும் லெஸி, மசாலா மணத்துடன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்புகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வரும் அறுசுவை டீமிற்கு எனது மனமார்ந்த‌ நன்றிகள். குறிப்பினை கொடுத்த‌ திருமதி. மகாலெட்சுமி ப்ரகதீஷ்வரன் அவர்களுக்கு எனது நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆஹா சமையல் ராணி திரும்பவும் வந்தாச்சே.. இன்றைய கிச்சன் ராணி அவர்களுக்கு வாழ்த்துகள்.. உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை. கூடவே குட்டிஸ் படமும் கலக்கல்.. பையனுக்கு இப்போ சரியாய்டுசா? திரும்பவும் சமையலில் கலக்குவீங்க போல.. வாழ்த்துகள் சுமி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க‌ வாழ்த்துக்கு ரொம்ப‌ நன்றி ரேவ். இப்போ பையனுக்கு பரவாயில்லை.. எனக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சி..:( //திரும்பவும் சமையலில் கலக்குவீங்க போல.. வாழ்த்துகள் சுமி..// இது கிச்சன் குயின் 1 ரெசிப்பீஸ் ..;) நன்றி ரேவ்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கியூட்டீஸ்... இன்னைக்கு தான் நிஜமா சமைச்சவங்க படம் போட்டிருக்காங்க சுமி ;) சூப்பர் குட்டீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இன்னைக்கு தான் நிஜமா சமைச்சவங்க படம் போட்டிருக்காங்க சுமி ;) // சாபிட்டவங்க‌ படம் போட்டு இருக்கேன்னு சொல்லுங்க‌ வனி..;)
//சூப்பர் குட்டீஸ்// தேங்யூ..தேங்யூ...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள் கிட்சன் குயின். பசங்க‌ ரொம்ப‌ சமத்து. அழகா இருக்காங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப‌ நன்றிங்க‌..:)
//பசங்க‌ ரொம்ப‌ சமத்து. அழகா இருக்காங்க‌.// தேங்யூங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி சூப்பர் லெஸி & சூப்பர் குட்டீஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவர், லெஸி செய்யறதுக்கும் ஈசிப்பா. தேங்க்யூ சோ மச் டியர்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....