காஷ்மீர் ரொட்டி

தேதி: December 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்கள் வழங்கியுள்ள காஷ்மீர் ரொட்டி என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா மாவு - 200 கிராம்
சலிக்காத கோதுமை மாவு - 200 கிராம்
கலக்கிய கெட்டி தயிர் - 3 தேக்கரண்டி
ப்ரெட் ஸ்லைஸ் - ஒன்று
பால் - கால் கப்
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
சீரகம், வெங்காய விதை, பெருஞ்சீரகம் - தலா கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு ஸ்பூன்


 

ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சலிக்காத கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, சீரகம், வெங்காய விதை, மற்றும் பெருஞ்சீரகம் சேர்க்கவும்.
அதனுடன் கலக்கிய கெட்டித் தயிர் மற்றும் ப்ரெட் ஸ்லைஸின் ஓரங்களை நீக்கிவிட்டு, பாலில் நனைத்து பிழிந்து சேர்த்து நன்றாகப் பிசையவும்.
பிசைந்த மாவை ரொட்டிகளாக தேய்க்கவும்.
தோசைக் கல்லை நன்றாகச் சூடாக்கி, ரொட்டியைப் போட்டு (எண்ணெய் சேர்க்காமல்) இருபுறத்தையும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான காஷ்மீர் ரொட்டி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Kashmir roti super a iruku

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய அஸ்மா அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

ஷைக்னா ,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா