சிக்கன் அக்பரா

தேதி: December 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4 (நடுத்தரமானது)
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப


 

சிக்கனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் சிக்கன் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, மல்லித் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி சிறிது நேரம் வேகவிடவும்.
வெந்ததும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். குழம்பு அதிகமாக இருந்தால் மூடியை எடுத்துவிட்டு திறந்த நிலையில் வேக வைக்கவும்.
சுவையான சிக்கன் அக்பரா தயார். சப்பாத்தி, பரோட்டா, புலாவ் ஆகியவற்றிற்கு சரியான பக்க உணவு இது.

கரம் மசாலா செய்முறைக்கான லின்க் : <a href="/tamil/node/25684"> கரம் மசாலா பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீண்டும் மகுடம் சூடியாச்சா?? :) மிகுந்த மகிழ்ச்சி கவிதா. உங்க படங்கள் எப்பவும் போல வெகு ஜோரா வந்திருக்கு. முக்கியமா இந்த சிக்கன் குறிப்பு படம் சூப்பர். அதான் வாழ்த்து சொல்ல இந்த குறிப்பு ;) நிச்சயம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் கவிதா. தொடர்ந்து உங்க பங்களிப்பு இந்த பகுதிக்கு இருப்பது ரொம்ப சந்தோஷம். இனியும் இருக்கணும், உங்களை அடிக்கடி மகுடத்தோடு முகப்பில் பார்க்கணும். நன்றி கவிதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய அறுசுவை குழுவினர்க்கும் அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, சிக்கன் அக்பரா செய்தேன், P.ரேவதியின் காஷ்மிர் ரொட்டியுடன் சுவையாக இருந்தது. சுவையான குறிப்பிற்க்கு நன்றி