இத்தாலியன் பாஸ்தா சமையல் குறிப்பு - படங்களுடன் - 30200 | அறுசுவை


இத்தாலியன் பாஸ்தா

வழங்கியவர் : KavithaUdayakumar
தேதி : வியாழன், 25/12/2014 - 09:56
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
5
1 vote
Your rating: None

திருமதி. மனோகரி அவர்கள் வழங்கியுள்ள இத்தாலியன் பாஸ்தா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

 • பாஸ்தா - ஒரு கப்
 • தக்காளி - 200 கிராம்
 • வெங்காயம் - ஒன்று
 • பூண்டு - 2 பற்கள்
 • தேன் - கால் தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கு
 • மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
 • சிகப்பு பழுத்த மிளகாய் - 3
 • பேசில் தழை - 4
 • ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி - தலா 2 சிட்டிகை
 • துருவிய மொசரேல்லா சீஸ் - 4 தேக்கரண்டி
 • ஆலிவ் ஆயில் - கால் தேக்கரண்டி

 

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பிசுபிசுப்பு இல்லாமல் பதமாக வேக வைக்கவும். வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் மூழ்கவிட்டு எடுத்து ஆறவிடவும்.

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கி விட்டு கூழாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், கூழாக்கிய தக்காளி, தேன், மிளகுத் தூள், ஒரீகனோ, பார்ஸ்லே, தைம், ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.

அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்துக் கலக்கவும்.

பாஸ்தாவைப் பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

இந்தச் சாஸை ப்ரெட்டில் தடவி, அதன் மேல் காய்கறிகள், சீஸ் தூவி அவனில் 350 டிகிரியில் 5 நிமிடங்கள் வைத்து எடுத்த குட்டி ப்ரெட் பீட்ஸா உங்கள் பார்வைக்கு.

இந்தச் சாஸை எடுத்து பதப்படுத்தி வைத்தால் பீட்ஸா சாஸ் போல உபயோகிக்கலாம்.கவிதா வாழ்த்துக்கள்

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்றிருக்கும் கவிதாவிற்கு என் வாழ்த்துக்கள்

மீண்டும் கிச்சன் குயின்

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்றிருக்கும் கவிதாவிற்கு என் வாழ்த்துக்கள்

இத்தாலியன் பாஸ்தா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய மனோகரி அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

செண்பகா,

செண்பகா,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நிசா,

நிசா,
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா