கரம்மசாலாபொடி

கரம்மசலாபொடி எவ்வாறு செய்வது? கரம்மசலாபொடி எதற்க்கு எல்லாம் பயன்படுத்தலம். நன்றி.

கரம் மசாலாப்பொடியின் செய்முறை என்னுடைய குறிப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன். கூடுதலாக வேறு எந்த பொருட்களும் சேர்க்காமல் இதேபோல் செய்துவைத்துக்கொண்டால், பலவித ரெசிப்பிக்கும் அதை உபயோகப்படுத்தலாம். உதாரணமாக, மட்டன், சிக்கன் போன்ற கறிவகைகளை சால்னாவாக செய்வதாக இருந்தாலும் சரி, எண்ணெயில் விட்டு பொரிப்பதற்கு தேவைப்படும் மசாலாவாகவோ, நெருப்பு தணலில் சுட்டு செய்வதற்கு தேவைப்படும் மசாலாகவோ அல்லது பிரியாணி போன்றவற்றை செய்யத்தேவைப்படும் மசாலாவாகவோ இருந்தாலும் சரி, இந்த கரம் மசாலாப்பொடியையே பயன்படுத்தலாம். இவையல்லாமல் சில வெஜிடேரியன் உணவு வகைகளுக்கும்கூட இது உபயோகப்படும்.
இதில் வேறு எதுவும் உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்!

அஸ்மா அவர்களுக்கு மிக்க நன்றி.இப்பொழுது வேறு சந்தேகம் இல்லை இருந்தால் கண்டிப்பாக கேட்கிறேன்.நன்றி.

கரம்மசாலபொடி செய்முறை குறிப்புகள் எதில் இருக்கிறது என்று கூறமுடியுமா?

ஹாய்
முகப்பில் வலப்பக்கத்தில் இதர வகைகளில் பொடி என்று உள்ளது அதில் பாருங்க.
உங்களாலதான் நானும் கண்டுபிடித்தேன்.
அன்புடன் அதி

என்னிடம் உள்ள மசாலா பொடி தனியா,வரமிளகாய் மஞ்சள் சேர்த்து அரைத்தது. இதை தான் நான் எல்லா மசாலா குழம்பு வகைகளுக்கும் யூஸ் பண்றேன். ஆனால்,குழம்பு சுவையில் வேறுபாடு தெரிவதில்லை. நான் அறுசுவை பார்த்து சில குழம்புகள் செய்வேன். இங்கு கொடுத்துருக்கும் தனியா தூள், கரம் மசாலா பொடியும், என்னிடம் இருக்கும் பொடியும் ஒன்றா. எனக்கு சொல்லுங்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

என்னப்பா யாரும் இந்த இழையை பார்க்கவில்லையா?

அன்புடன்
மகேஸ்வரி

http://www.arusuvai.com/tamil/node/7022 இந்த லிங்க்ல இருக்கு பாருங்க. என்ன வித்தியாசம்னு உங்களுக்கே தெரிஞ்சுரும்;)

Don't Worry Be Happy.

கரம் மசாலா பொடி நீங்க வைத்திருக்கும் பொடி இல்லை. கரம் மசாலா பொடி ஏலக்காய் கிராம்பு பட்டை போன்ற வாசனைப் பொருட்கள் கலந்து பொடித்தது.
தனியா பொடி ன்னா அது தனி தனியா தூள்.
http://www.arusuvai.com/tamil/node/9874
http://www.arusuvai.com/tamil/node/625 இந்த லின்க் பாருங்க. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயலஷ்மி ரொம்ப தேங்ஸ்பா. அந்த லின்கில் இருக்கும் பொடி வாசனைக்காக சேர்ப்பது என்று நினைக்கிறேன். நான் கேட்பது சிக்கன்,மட்டன் மற்றும் அரைத்து வைக்கும் குழம்புகளுக்கு சேர்க்கும் பொடியை பற்றி.

அன்புடன்
மகேஸ்வரி

ரொம்ப தேங்ஸ் கவி. நான் இந்த முறையில் தயாரித்து பார்க்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்