கீரை கிச்சடி

தேதி: December 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
பாலக் கீரை - ஒரு கைப் பிடி
பெருங்காயம் - கால் சிட்டிகை
மஞ்சள் தூள் - அரை சிட்டிகை


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைக்கவும்.
அரிசி, பருப்பு மற்றும் கீரை ஆகியவற்றை நன்கு கழுவி வைக்கவும்.
குக்கரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடியிட்டு 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து ஒரு மத்தினால் நன்கு மசிக்கவும்.
குழந்தைகளுக்கான கீரை கிச்சடி தயார். நெய் ஊற்றி கொடுக்கவும்.

குழந்தைகளுக்கு இந்த சாதத்தை ஆறு மாதத்திலிருந்து கொடுக்கலாம். நாங்கள் ஒரு வயது வரைக்கும் குழந்தைகளுக்கு உப்பு சேர்ப்பதில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எல்லோரும் வித்தியாச வித்தியாசமா செய்றீங்கப்பா.. உங்க பெயர் என்னனே சரியா தெரியவில்லை.. வனியா? வாணியா? உங்க குறிப்பு எல்லாமே சூப்பரா இருக்கு.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கீரை கிச்சடி அருமை வாணி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பர் குறிப்பு
அவசியம் ட்ரை பண்ணி பார்கிறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா