வீட் பனானா தோசை

தேதி: December 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை மாவு - ஒரு கப்
வாழைப்பழம் - 2
சர்க்கரை - ஒரு சிறிய கப்
முட்டை - ஒன்று
தேங்காய்த் துருவல் - அரை கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வாழைப்பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து வைக்கவும். முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன் அரைத்த வாழைப்பழக்கூழ், முட்டை, உப்பு மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து எண்ணெய் தடவி, கரைத்து வைத்திருக்கும் மாவை தோசையாக வார்க்கவும். மேலே சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
எளிதில் செய்யக்கூடிய வீட் பனானா தோசை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வீட் தோசை செய்வேன் ரேவா... பனானா கலந்து செய்தது இல்லை.. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.. வாழ்த்துகள் ரேவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வீட் பனானா தோசை நல்லா இருக்கு. நானும் ரேவ் போல‌ பழம் சேர்த்து செய்தத்து இல்லை, நெக்ஸ்ட் டைம் இது போல‌ ட்ரை பண்றேன்.வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரேவா
பாட்டி ஸ்கூல் விட்டு வந்ததும் மாலை டிபனுக்கு செய்து தந்திருக்காங்க‌.
அந்த‌ நாள் ஞாபகம்......
இதை சோடா உப்பு போட்டு பலகாரமாகவும் சுடலாம்.
எளிமையான‌ சுவையான‌ குறிப்புக்கு நன்றி ரேவா:)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் &டீம் க்கு நன்றி

Be simple be sample

இப்படி செய்தாலும் நல்லாருக்கும் செய்துபாருங்க ரேவ். தான்க்யூ அ

Be simple be sample

செய்துபார்த்துட்டு சொல்லுங்க சுமி . தான்க்ஸ் டியர்

Be simple be sample

ஆமா நிகி. எளீமையான குறிப்பும்கூட. தான்க்யூ.

Be simple be sample

ரேவதி,
நானும் இதே போல் கொஞ்சம் நட்ஸ் கூட சேர்த்து செய்வதுண்டு..
குறிப்பு பிடித்து இருக்கு ..
மேலே நிகியின் பலகாரம் டிப்சும் சூப்பர் ஐடியா
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

I make paniyaram using this same recipe , never tried dosa. Will try next time :))

என் அப்பா நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எனக்கு இது போல சப்பாத்தி மாவில் பிசைந்து செய்து தருவார். அது நினைவுக்கு வருது. :) நல்லா இருக்கு ரேவ்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா