ஃப்ரைட் ஐஸ்க்ரீம்

தேதி: December 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வெனிலா ஐஸ்க்ரீம் - தேவையான அளவு
ப்ளையின் ஸ்பாஞ்ச் கேக் - 4 துண்டுகள்
முட்டை - ஒன்று
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஐஸ்க்ரீமை ஒரு ஸ்கூப்பினால் அல்லது சிறிய குழி கரண்டியினால் பந்து போன்று உருட்டி பட்டர் பேப்பர் விரித்த ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரீஸரில் 3 மணி நேரங்கள் வைத்திருக்கவும். (இவ்வாறு வைத்திருப்பதால் ஐஸ்க்ரீம் பந்துகள் நன்கு கெட்டியாகும்).
கேக் துண்டுகளை உதிர்த்து வைக்கவும்.
முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
3 மணி நேரங்கள் கழித்து ஃப்ரீஸரிலிருந்து ஐஸ்க்ரீம் பந்துகளை எடுத்து, அடித்து வைத்துள்ள முட்டையில் பிரட்டவும்.
பிறகு அதனை உதிர்த்து வைத்துள்ள கேக் க்ரெம்ஸில் பிரட்டவும்.
பிரட்டிய உருண்டைகளை கைகளால் நன்கு உருட்டவும்.
உருட்டிய உருண்டைகளை கால் மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும்.
கால் மணி நேரம் கழித்து உருண்டைகளை வெளியே எடுத்து மீண்டும் ஒரு முறை முட்டை கலவையில் பிரட்டியெடுத்து, கேக் க்ரெம்ஸில் பிரட்டி மேலும் கால் மணி நேரங்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கவும்.
பிறகு உருண்டைகளை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து சூடான எண்ணெயில் கவனமாக போடவும்.
பழுப்பு நிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
ஐந்து நட்சத்திர உணவகங்களில் பரிமாறப்படும் "சூடான" ஃப்ரைட் ஐஸ்க்ரீம் எளிமையான முறையில் வீட்டிலேயே தயார்.

பொரிப்பதற்கு பயன்படுத்தும் பாத்திரம் குழிவானதாக இருக்க வேண்டும். உருண்டைகள் மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும்.

கேக் க்ரெம்ஸ்க்குப் பதில் ப்ரெட் க்ரெம்ஸும் உபயோகிக்கலாம், ஆனால் கேக் க்ரெம்ஸில் தான் சுவை நன்றாக இருக்கும்.

எட்டாவது ஸ்டெப் வரை செய்து ஒரு மாதம் வரை ஃப்ரீஸரில் வைத்திருந்து, தேவையான போது எடுத்து பொரித்து பார்ட்டிகளுக்கு பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா பார்க்கவே செம்ம சூப்பர்ங்க. டேஸ்டும் செம்மையா இருக்கும்னு நினைக்கிறேன்.. பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. நிச்சயம் ட்ரை பண்றேன்.. வாழ்த்துகள் Vani Selwyn..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Congratulations on your 100th recipe dear akka!!!! It sounds so unique. .. keep rocking! !!

God is good! All the time!

வாணி சூப்பரோ சூப்பர்.
செம‌ ஈசி அன்ட் டேஸ்டி.
இப்படி ஈசியான‌ வித்தியாசமான‌ குறிப்பா நிறைய‌ கொடுங்க‌.:)
ஆமா...ஒரு டவுட் பா...
ஐஸ்கிரீம் பொரிக்கும் போது ஸ்டவ்வை சிம்ல‌ வச்சி கவனமா பொரிக்கனுமோ?? . உடைஞ்சிடாதா? எப்படி பொரிக்கணும்னு டிப்ஸ் ஏதும் உண்டா வாணி??

வாணி எப்படிப்பா இப்படில்லாம் செய்றிங்களோ. சூப்பர்ப்பா.

Be simple be sample

வாணி,
marvelous
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

முன்பு சின்னவர்கள் பிறந்தநாள் சமயம் பண்ணியிருக்கேன் வாணி. ரொம்பப் பிடிக்கும். இப்போ சின்னவங்க வளர்ந்துட்டாங்க. நமக்கும் சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைக்க மாட்டேன் என்குது. :-) அழகா ப்ரசண்ட் பண்ணி இருக்கீங்க. எனக்கும் ஒரு பார்சல் ப்ளீஸ்.

‍- இமா க்றிஸ்

இந்த‌ குறிப்பை பிரட்டின் உள் ஐஸ் கீரீம் வைத்து செய்வதுண்டு,கேக்கிலும் நல்லா தான் இருக்கும்.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Hi vani madam nice & different recipe na ithu varaikum ippadi oru recipe kelvi pattathu illa.. then egg ku pathila enna use panalam???

thanks for your comments and feedback . :)))

Thanks Babe. Glad to see ur comments. :)))

Thank u for the feedback Nikila :))
//ஐஸ்கிரீம் பொரிக்கும் போது ஸ்டவ்வை சிம்ல‌ வச்சி கவனமா பொரிக்கனுமோ?? . உடைஞ்சிடாதா? எப்படி பொரிக்கணும்னு டிப்ஸ் ஏதும் உண்டா வாணி??//

Should be in high flame ( like frying pappad) , place the ice cream ball in a ladle and drop it into the hot oil, immediately it will turn into brown , turn it over and remove it from oil ( frying time must be not more than 1 minute)
It won't break at all as the ice cream is firm and coated well.

Sorry about the English typing as I am on holiday and replying from my hand phone :(

So simple Revathi.P :))
Thank u

Cheers Kavitha :))

//முன்பு சின்னவர்கள் பிறந்தநாள் சமயம் பண்ணியிருக்கேன் வாணி. // Really Imma !! :)
//ரொம்பப் பிடிக்கும். // I like this desert too :))
Presentation idea was given by my lil girl , thank u , will tell her Imma, :))
Parcel has been sent ;) enjoy it with your summer weather :))

I tried both Musi, Cake layer is tastier than bread
Thanks for ur feed back Musi :))

Make a paste with maida + water , use it for coating . ( instead of egg)
Thank you :))

சூப்பரா இருக்கு. கலக்கறீங்க‌. சூப்பரோ சூப்பர்

எல்லாம் சில‌ காலம்.....

குறிப்பு எளிமையா நல்லா இருக்குங்க :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks akka ...

எளிமையான‌ செய்முறை சிஸ். நானும் முயற்சி செய்கிறேன். தங்களுடைய‌ வித்தியாசமான‌ குறிப்புக்கு நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!