
"உங்களைலயெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு" இது எனக்கு அடிக்கடி வரும் மைண்ட்வாய்ஸ். ;)
எதுக்குமா இப்படி ஒலிக்குது உனக்கு அப்படின்றிங்களா. நாம இப்ப கிச்சன்குயினா? ஆகிட்டுவரோம்ல அதோட தாக்கம்தான் இப்படி.
நாம கிச்சன்குயின் ஆகறதுக்கு நம்ம வீட்டுல எல்லாம் டெஸ்ட் பீஸ் ஆகிட்டாங்க. என் கணவர், பிள்ளைங்க எல்லோருமே நான் எது செய்தாலும் வாயே திறக்கமாட்டாங்க. அப்பறம் எப்படி சாப்பிடுவாங்கன்னு கேட்கபடாது, நான் என்ன புதுசா சமைச்சு போட்டாலும் நல்லாஇருக்குன்னு சாப்பிடுவாங்க. என்னோட சமையல் ஆர்வத்துக்கு இதுதான் காரணம். பெரும்பாலும் என் முதல் அட்ம்ட் சூப்பராவே இருக்கும். இரண்டாம் முறையா செய்யும்போது சொதப்பல் ஆகிடும். ( ஏற்கனவே செய்துருக்கோம்ல அப்படின்னு கொஞ்சம் திமிர் ஒட்டிக்கும், நம்ம அல்வா மாதிரி) இதனாலயே நான் இரண்டாவதுமுறைலாம் முயற்சிக்கறது இல்ல. திடிர்னு அந்த ரெசிபி எப்படி செய்திங்கன்னு கேட்டா சொல்லவேமாட்டேன். ஏன்னா மறந்துபோய்ருப்பேன். :)
போனவாரம் பாம்பே அல்வா செய்யலாம்ன்னு திடிர்ன்னு ஒரு ஆசை. சரி கடைக்கு போய் தேவையான பொருட்கள் வாங்கிட்டு, அப்படியே என் நாத்தனார்க்கிட்ட அதோட ரெசிபி கேட்கலாம்ன்னு போனேன். அங்கபோனா என் நேரம் அவங்க அங்க இல்ல. சரி முயற்சிய கைவிடக்கூடாதுன்னு அவங்க எப்பயோ அது எப்படி செய்யணும்ன்னு சொல்லிருக்காங்க, அதெல்லாம் நியாபகம் படுத்திக்கினேன். கொஞ்சம் கொஞ்சம்தான் நியாபகம் வருது, சரி நமக்கு நம்ம அறுசுவை கைகுடுக்கும்ன்னு வீட்டுக்கு வந்தாச்சு. Google ல தட்டினா நம்ம வனியோட 'பாம்பே அல்வா' அங்க வருது. அட நம்ம வனியே அனுப்பினது இருக்கேன்னு எப்படி செய்யறதுன்னு பார்த்து ஆரம்பிச்சாச்சு. கணவர், பிள்ளைங்க எல்லாம் வெயிட்டிங். வேற எதுக்கு நாம கிண்டற அல்வாவ சாப்பிடத்தான்.
ம்ம்ம்ம் ஸ்டார்ட் பண்ணியாச்சு அல்வா கிண்டறதுக்கு, என் நாத்தினார் 15 நிமிஷத்துல கிண்டிடலாம் சொன்னாங்க. எனக்கு 30 நிமிஷம் ஆகியும் கெட்டிபடல. அவ்வளவு தண்ணிர் ஊத்தியாச்சு. நானும் விடாம கிண்டின்னே இருக்கேன். கடைக்குட்டி வந்து அம்மா 'எப்பமா தருவே' அப்படின்னு கேட்குது. ( வந்துட்டா தரமாட்டனாடா. இது நம்ம மைண்ட் வாய்ஸ்) இங்க நின்னாலாம் தரமாட்டேன், அம்மா செய்துட்டு? கூப்பிடறேன் வாடா செல்லம் அப்பட்டின்னு தொடர்ந்து கிண்டினே இருந்தேன். இந்த வனி மட்டும் இப்படி வரும் அப்படி வரும்ன்னு போட்டோ போட்டுருக்காங்க. நமக்கு வாணலிய விட்டு வந்தாபோதுன்னு நினைச்சு எப்படியோ செய்துமுடிச்சுட்டேன். நமக்கு டேஸ்ட்லாம் மிஸ் ஆகாது. ஃபினிஸ்சிங்லதான் சொதப்பிடுவோம். அப்பறம் அல்வா ஒரு நொடில காலி ஆகிடுச்சு. ;) அட சாப்பிட்டுதாங்க காலிபண்ணோம்.
அப்பறம் என்ன திரும்ப வேற என்ன செய்யாலுன்னு யோசிக்கவேண்டியதுதான். அப்படி யோசிச்சு சொதப்பினதுதான் 'தூத்பேடா' . நானும் குறிப்பு பார்த்துட்டே செய்தா அது லாஸ்ட் வரைக்கும் அழகா பிடிச்சு வைக்கறமாதிரி வரவேயில்ல. அல்வா மாதிரியே வாணலில உட்கார்ந்துன்னு இருந்தது. சரி வீட்டுல வேற வந்தாச்சு மறைக்கவழியில்ல எல்லாருக்கும் ' மில்க் அல்வா' அப்படின்னு ஒரு பெயர் வச்சு குடுத்துட்டேன். எல்லாரும் சாப்பிட்டு முடிச்சுட்டாங்க. ஆனா நைட் எல்லாரும் சாப்பாடுகூட சாப்பிடல. அந்த அளவுக்கு அது உள்ளபோய் ஃபுல்லா ஆகிடுச்சு. இவ்வளவுக்கும் நல்லா இல்லன்னு யாருமே சொல்லல என் வீட்டுல நல்லவங்க. இது போல பல சம்பவங்கள் அரங்கேறும். அதெல்லாம் சொன்னா என் குறிப்புகள் செய்து பார்க்க யோசிப்பிங்க. இதோட முடிச்சுக்குவோம் என்ன நான் சொல்லறது. என் மைண்ட் வாய்ஸ் கரெக்ட்தான. ;)
Comments
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
Paavi Revs
Vani paavam... Bombay alwa paavam 3:)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவ்ஸ்..
ஏம்மா கண்ணு.. நீ இப்பத்தான் இப்படியா இல்ல எப்பவுமே இப்படி தானா..;) பாவம் புள்ளைகளும் அண்ணனும். உங்கிட்ட ( உன் சமையல்) சிக்கிட்டு படற பாடு.. அய்யோ....;)
//ஆனா நைட் எல்லாரும் சாப்பாடுகூட சாப்பிடல. அந்த அளவுக்கு அது உள்ளபோய் ஃபுல்லா ஆகிடுச்சு.// சிரிச்சு முடியல எனக்கு.. ( எங்க வீட்டுலேயும் இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதுண்டு..;)
//
அதெல்லாம் சொன்னா என் குறிப்புகள் செய்து பார்க்க யோசிப்பிங்க. இதோட முடிச்சுக்குவோம் என்ன நான் சொல்லறது.// இந்த சுய விளம்பரம் உனக்கு தேவையா..;) ..;) காலையிலேயே உங்க நகைச்சுவை பதிவு தான் படிச்சு இருக்கேன் ரேவ்ஸ். மனசுக்குள்ள ஆயிரம் பட்டாபூச்சி,இந்த உலகத்துல என்னைப் போல ஒருத்தின்னு( சமைக்கிறதுல) தான்..;) வாழ்த்துக்கள் ரேவ்ஸ்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
அவ்வ்வ்வ் ;)
லட்டு செய்யுங்க சரியா வராட்டி இதுதான் பூந்தின்னு சொல்லி சமாளிச்சிடலாம் ;)
அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்
ரேவதி அக்காங்,
நகைச்சுவை திலகம்னு பட்டம் கொடுக்கலாம் உங்களுக்கு, :-)
படமே பட்டாஸா இருக்குங்.. பதிவும் செம சூப்பர்.
நட்புடன்
குணா
fanaceer
என்ன ஒரு சிரிப்பு .
Be simple be sample
வனி
ஹி ஹி ஹி. வனி நான் என்னபண்ணறது எப்பயாவது இப்படிதான். ஆனா டேஸ்ட் சூப்பர்
Be simple be sample
சுமி க
கிகிகிகி சுமி. எப்பவும் இப்படிதான். நம்மை போலதான் நிறைய பேர். நாம சொல்லிட்டோம். அவிங்க சொல்லல அம்புட்டுதான்.
Be simple be sample
ஜெய்லானி
ம்ம்ம்ம்ம் குட். ஐடியா. அடுத்து டிரைப்பண்ணறேன். டான்க்ஸ்
Be simple be sample
குணாங்
ஒய் தம்பிங் இப்படி ஒரு கொலவெறி. அப்ப அல்வா மாதிரி இல்ல.அதான் சொல்லறிங்க.
Be simple be sample
ரேவதி நீங்க போட்ட பதிவ
ரேவதி நீங்க போட்ட பதிவ பார்த்து.என் அனுபவம் நியாபகம் வந்து நானும் என்.மகளும் விழுந்து விழுந்து சிரித்து வயிருவலிக்குது போங்க.என்னானு சொல்ரேன் சிரிப்பு வந்தா எல்லாரும் சிரிங்க
நான் ஒரு நாள் .என்கனவர் என்பென்னிடம் நெய்மைசூர்பாகு செஞ்சுதரேனு சொன்னேன் அதுக்கு அவங்க ரென்டுபேரும் ஏன் விஷபரீட்சை உனக்கு அதெல்லாம் வராது.நெய்க்கு பிடிச்ச கேடுனு சொன்னாங்க நான் அவங்ககிட்ட சவால் விட்டு கிருஷ்னா ஸ்வீட் டேஸ்ட்ல செய்யரேனு சொன்னேன்.நெட்ல பார்த்து அதன்படி செஞ்சேன்.நான் கின்ட கின்ட நெய் விட்டு மேலே வந்தது நான் சும்மா அப்படியே கின்டி கொட்டியிருந்தால் நல்லாயிருந்துயிருக்கும்.நிரைய நெய்னு கொஞ்சம் அள்ளிட்டேன்.பூத்துவந்ததும் கொட்டி துன்டு போட்டால்.கருங்கல் ஜல்லிபோல ஆயிட்டு யாரும் வரமுன்னே ஏதாவ்து பன்ன யோசித்து கடாயில் தன்னீர் ஊத்தி அதபோட்டு கின்டினேன்.அல்வா போல வந்தது கொஞ்சம் ரவை மேலே தூவி கலர் ஏலக்காய்தூள் சேர்த்து அல்வா வா தட்டில் கொட்டி துன்டு போட்டேன்.அவங்க ரென்டுபேரும் வந்து எங்க மைசூர்பாகுனு கேட்டாங்க.நான் அத நெட்ல தேடினேன் கிடைக்கல அதான் நான் திருனெல்வேலி அல்வா பன்னிட்டேன்னு சொன்னென்.ஆஹா சூப்ப்ர்னு காலிபன்னி இன்னொரு டைம் நிரைய பன்னுனு சொன்னாங்க.அந்த ரகசியம் இன்னைக்குதான்.உங்க பதிவ பார்த்ததும்.என்மகள்கிட்ட சொல்லி சிரித்தோம்.திருனெல்வேலிகாரங்க யாரும் திட்டாதிங்க.ரேவதி நம்ம ஒன்னுசெஞ்சு நல்லா வரலேன்னா.இது போல சாமர்த்த்யமாசெய்யலாம் தப்பில்ல
ரேவதி
// நமக்கு வாணலிய விட்டு வந்தாபோதுன்னு நினைச்சு // -
நானும் இப்படி பல முறை நினைச்சிருக்கேன். எப்படியோ உங்களுக்கு டேஸ்ட் வந்துருதே. அப்போ நீங்க கில்லாடி தான்.
அன்புடன்
பாரதி வெங்கட்
akka enaku marriage agi
akka enaku marriage agi 2months achu,na enu date agala today morning urine test pani patha athula negative nu vanthuchu..so na pregnantu agalaa dateu agala...athavathu problem ma..pls rly panunga...plsssssssssssss
Sangeeraj
சகோதரி மன்னிக்கவும் உங்களுடைய கேள்விகளை சந்தேகங்களை மன்றத்தில் அதற்குண்டான இழையில் கேட்கவும்,
ரேவ்ஸ்
ரேவா சும்மாவே அல்வா கிண்டுவீங்க இதுல எதுக்கு பாம்பே அல்வாலாம் ட்ரை பன்றீங்க ;)
ஹாஹா உங்க எழுத்து நடை சூப்பரோ சூப்பர் ரேவா படிச்சி சிரிப்பு தாங்கல
ஆமா ஒரு டவுட்டு # கரெக்டான பெயரோட கரெக்டான ரெசிப்பி எப்பதான் செய்வீங்க :P பூரி சுட்டா அதுக்கு பேரு ஓட்டை வடை அல்வா செய்தா அதுக்கு பேரு பால் அல்வா ஏம்மா ஏன் இப்படி ;)
//நமக்கு வாணலிய விட்டு வந்தாபோதுன்னு// அல்வா வாணலிய விட்டுதான் வரலன்னா போட்டோவுக்கும் சரியா வரலியே :P
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவதி
//இவ்வளவுக்கும் நல்லா இல்லன்னு யாருமே சொல்லல என் வீட்டுல நல்லவங்க. இது போல பல சம்பவங்கள் அரங்கேறும். அதெல்லாம் சொன்னா என் குறிப்புகள் செய்து பார்க்க யோசிப்பிங்க// "ரொம்ப" நல்லவங்களா இருக்காங்களே!!! ""என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா?"".
ஆனால் சமீபத்தில் நான் டிரைசெய்த ஒரு குறிப்புக்கும் இதே கதைதான்! டேஸ்ட் ஓகே தான், அந்த பதம்தான் எப்பவும் சொதப்பல்....:))))
.
ரேவதி அக்காங்
இல்லீங்க :-) அல்வா மாதிரிதான் தெரியுதுங்.
நட்புடன்
குணா
nisa
ஆத்தி நிஷா நீங்க பெரிய கில்லாடிதான். நானாவது பெயர் மட்டும் மாத்திகுடுத்தேன். நீங்க என்னனவோ போட்டு ரெசிபியவே மாத்திட்டிங்களே. நல்ல சமாளிப்பு. ஒரே சிரிப்புதான் போங்க.
Be simple be sample
பாரதி
பாரதி. நீங்க நான் இல்ல. நிறைய பேருக்கு இப்படிதான். அவங்க வெளிய சொல்லல .அம்புட்டுதன்.
Be simple be sample
சுவா
ஹா ஹா ஹா . நான் என்ன பண்ணறது சரி நமக்கு பேரா முக்கியம். சாப்பிட்டு காலியான சரிதான.
Be simple be sample
ரேவா
உங்க வீட்ல நல்ல ஒத்துழைப்பு தராங்க.
அதனால தான் நீங்க நிறைய புது ரெசிபி ட்ரை பண்ண முடியுது.
உங்க குடும்பத்தினரைத் தான் பாராட்டணும்.
poornima
ஹா ஹா ஹா பூர்ணிமா இந்த டயலாக் இப்படி டெவலப் ஆகிடுச்சே. என்னமா பண்ணறது . எனக்கு சொதப்பும் ஆனா டேஸ்ட் மிஸ் ஆகாம தப்பிச்சுக்கறேன். அதான்.
Be simple be sample
நிகி
கரெக்டா சொல்லிட்டிங்க நிகி. அவங்க இப்படி இல்லனா எனக்கு சமைக்கற ஆர்வமே இருக்காது.
Be simple be sample
YENAKKUCHUDITHAR LEGGINS
YENAKKUCHUDITHAR LEGGINS PANT CUTT PANNA YARAVADHU SOLLUNGA
ANAIVARAYUM NESI
YENAKKUCHUDITHAR LEGGINS
YENAKKUCHUDITHAR LEGGINS PANT CUTT PANNA YARAVADHU SOLLUNGA
ANAIVARAYUM NESI
சுடி லெக்கிங்ஸ்
சாரி & அட்வான்ஸாக நன்றி ரேவ்ஸ். :-) பதில் சொல்லிட்டு ஓடிருறேன்.
அகல்யா... உங்களுக்குப் பிடித்த லெக்கிங்ஸ்ஸை வைத்து கட்டிங் எடுக்கிறதுதான் ஈஸி. தையல் இடைவெளி, மேலே எலாஸ்டிக் மடிப்பு, கீழே வரும் மடிப்பு எல்லாம் கணக்குப் பார்த்து வரைஞ்சு எடுங்க. திரும்ப அதே ஸ்ட்ரெச்சிங் உள்ள துணி வாங்கித் தைக்கணும்.
அல்லாமல் சாதாரண துணியில் தைக்கிறதா இருந்தால்... வரைந்த கட்டிங்கை, நடுவில் மேலிருந்து கீழாக ஒரு நேர்கோடு வெட்டுங்க. லெக்கிங்ஸ் எவ்வளவு தூரம் இழுபடுகிறது என்பதை இழுத்துப் பார்த்து, அந்த அளவு நீளப் பேப்பர் பட்டி வெட்டி நடுவுல ஒட்டிப் பொருத்துங்க. கட்டிங் கிடைச்சாச்சு.
இப்போ வர ரெடிமேட் துணி எல்லாம் இடுப்பு, வயிறு என்று கட்டிங்கில் வித்தியாசம் காணோம். துணியின் ஸ்ட்ரெச்சினஸ் எல்லாவற்றுக்கும் ஈடுகட்டி விடுகிறது.
லெக்கிங்ஸ் எப்பவும் தேவைக்கு மேல அகலமா துணியை வெட்டிட்டு தைக்க ஆரம்பிக்கலாம். மாட்டிப் பார்த்து அளவு அட்ஜஸ்ட் பண்ணலாம். கடைசியா ஹெம் & எலாஸ்டிக் தைக்கலாம். மெல்லிசா உள்ள ஸ்ட்ரெச்சி துணி தடிப்பானதை விட ஸ்ட்ரெச்சினஸ் அதிகமாக இருக்கும்.
- இமா க்றிஸ்
அல்வா அல்லவா
அன்பு ரேவதி,
அல்வா கொடுக்கறது அல்வா கொடுக்கறது அப்படிம்பாங்களே அது இதுதானா!!!
சூப்பராக கிண்டியிருக்கீங்க போங்க.
உங்க வீட்டில் உள்ளவங்களுக்கு பொறுமை திலகம் என்று பட்டம் கொடுக்க வேண்டியதுதான்.
அன்புடன்
சீதாலஷ்மி