தோழிகளே ப்ளீஸ் ஏதாவது நல்ல பதில் சொல்லுவீர்களா?

அறுசுவை அங்கத்தவர் அனைவருக்கும் வணக்கம், நான் மஹாலக்ஷ்மி. இன்றுதான் புதிதாக இணைந்துள்ளேன். இந்த தளத்தில் நான் இணைந்து கொள்ள முக்கிய காரணம் எனது மகன் தான். அவனுக்கு ஜனவரி வந்தால் 4 வயது. ஆனால் 91 cm உயரம்தானிருக்கிறான். என் கணவர் 172cm உயரம். நான் 154cm . ஆனால் என் மகள் வயதிற்கேற்ற வளர்ச்சி. மகன் உயரம் குறைவாக உள்ளதால் மிகுந்த மன உளைச்சலோடு இருக்கிறேன்.ஒரு வருடத்தில் 4cm தான் வளர்ந்திருகிறான். தோழிகளே ப்ளீஸ் ஏதாவது நல்ல பதில் சொல்லுவீர்களா? சாப்பிடவே மாட்டான். எடையும் 12kg தான்.என் மகன் கடைசி 170 வளர்ந்தாலும் போதும். வளர்வானா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Height of the child is Normal
Weight of the child is below the Standard Norm

Use online Calculater for Ideal Height and Weight for Children

Nothing to worry everything will change

மேலும் சில பதிவுகள்