ஸ்டஃப்டு சப்பாத்தி ரோல்

தேதி: January 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

கோதுமை மாவு - ஒன்றரை கப்
மிளகாய் வற்றல் - 4
உருளைக்கிழங்கு - 4
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - அரை தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து, மசித்து எடுத்துக் கொள்ளவும்.
பட்டை, சோம்பு, புளி, மிளகாய் வற்றல், உப்பு, சீரகம், தனியா, மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தும், அதில் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேரும்படி 4 நிமிடம் கிளறவும். நன்றாக மசாலாப் போல் வந்ததும் இறக்கிவிடவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவில், எலுமிச்சை அளவு மாவை எடுத்து மெல்லியதாக சப்பாத்தி போல் தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தியின் மேல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி பரவலாக தேய்த்து விடவும்.
பின்னர் அதன் மேலே சிறிது கோதுமை மாவைத் தூவி விடவும். அதனை இப்போது இரண்டாக மடிக்கவும்.
இரண்டாக மடக்கிய சப்பாத்தியின் ஒரு புறத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பரப்பி, அதன் மீது சிறிது கோதுமை மாவினைத் தூவி, மீண்டும் இரண்டாக மடக்கவும்(சமோஸா போல).
அதை சப்பாத்தியாக முக்கோண வடிவிலேயே பெரிதாக தீட்டவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும், சப்பாத்தியை போட்டு, மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
பிறகு செய்து வைத்த மசாலாவை வெந்த சப்பாத்தியின் ஒரு ஓரத்தில் வைத்து, மசாலா உட்புறம் இருக்குமாறு அப்படியே உருட்டவும்.
இப்படியே அனைத்து சப்பாத்திகளையும் செய்து, மசாலாவை வைத்து ரோல் செய்யவும். சாதாரண சப்பாத்தியை விரும்பாத குழந்தைகள்கூட இதனை விரும்பிச் சாப்பிடுவர். இதனை அப்படியே சாப்பிடலாம். சாஸ், குருமா போன்றவற்றை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hai athai, how r u, i tried ur receipe. it comes out well. got appreciation from my husband also. thank u

how to roll tho chapathi thin and round give some tips please

சப்பாத்தி மெல்லியதாக வர
நல்ல தளற குழைத்து கொள்ளவேண்டியது.
ஒரு எலுமிச்சை அளவு மாவு வைத்து இரண்டு பக்கமும் மைதா (அ) கோதுமை மாவும் தடவி நல்ல நடுவில் தான் தேய்க்கவும்.
ஜலீலா

Jaleelakamal

(உங்க பேரை தமிழ்ல எழுத பயமா இருக்கு:-))

நீங்கள் இந்த கேள்வியை பலமுறை கேட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தீர்கள். உங்களுக்கு அதனை படங்களுடன் விளக்கலாம் என்று நினைத்திருந்தேன். அதனால் தாமதம் ஆயிற்று. மன்னிக்கவும். (இன்னமும் படங்கள் எடுக்கவில்லை, ஆனால் சப்பாத்தியை வட்டமாக தேய்ப்பதில் நான் கொஞ்சம் திறமைசாலி :-), ஒரு சப்பாத்தி தேய்க்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்று மட்டும் கேட்கக்கூடாது. )

சப்பாத்தி மெல்லியதாக வருவதற்கு மேலே சகோதரி அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் மாவினை தயார் செய்து கொள்ளவும்.

சிறிய உருண்டையாக மாவை உருட்டி, முதலில் ஒரு பக்கம் நீளவாட்டில் தேய்ப்பீர்கள். அடுத்து பெரும்பாலோனோர் செய்யும் தவறு, அதனை அப்படியே 90 டிகிரிக்கு க்ளாக் வைஸ்ஸில் திருப்பி, மீண்டும் மேல் நோக்கி தேய்ப்பார்கள். இப்படி செய்தால் சப்பாத்தி கிட்டத்திட்ட ஸ்கொயராக வந்துவிடும்.

இதற்கு முதலில் நீளவாட்டில் லேசாக தேய்த்துக்கொண்டு, பிறகு 90 டிகிரிக்கு திருப்பிப் போட்டு தேய்க்காமல், 30, 30 டிகிரியாக திருப்பி போட்டு தேய்க்கவும்.

அப்படி தேய்க்கும் போது மாவினை மிகவும் மெல்லியதாக கடைசி வரை நீட்டக்கூடாது. முதலில் சற்று தடிமனாக ஒரு சிறு வட்டத்திற்கு தேய்த்துக்கொண்டு, அது நல்ல வட்டமாக வந்த பிறகு மேலும் அதை மெல்லியதாக நீட்ட வேண்டும். இப்படி செய்யும்போது சற்று நேரம் எடுக்கும். இதை பழகிவிட்டீர்கள் என்றால் அடுத்தடுத்த முறையில் எளிதாக செய்யலாம்.

மிகவும் சரியான வட்டமாக வரவேண்டும் என்று விரும்பினால், மாவினை விரும்பிய வடிவத்தில் பெரிதாக நீட்டித் தேய்த்துக்கொண்டு, ஒரு டிபன் பாக்ஸ் மூடி அல்லது சிறிய தட்டு கொண்டு வட்டமாக கட் பண்ணிக் கொள்ளவும்.

இப்ப ஒரு கேள்வி. சப்பாத்தி, தோசை, பூரி எல்லாம் ஏன் வட்டமா இருக்கு தெரியுமா?

இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் கொடுப்போருக்கு இந்த வாரத்து "அறிவியல் ராணி" பட்டம் கொடுக்கப்படும்:-)

பரவால நல்ல டிக்ரி கனக்கெல்லாம் கொடுத்து விளக்கியிருக்கீங்க....நானும் இனி மேப் போடாம ஒரு காம்ப்ஸ் வெச்சு சப்பாத்தி செஞ்சு வட்டமாக்கிடலாம்னு முடிவு பன்னிட்டேன்.

தளிகா:-)

அட்மின் அண்ணா, என்னுடைய யூகம்....... சதுரத்தின் பரப்பளவை விட வட்டத்தின் பரப்பளவு அதிகமோ, அதனால்தானோ....
ஏதோ தோணினதை சொல்லிட்டேன்....(முட்டாள் ராணி பட்டம் எல்லாம் இல்லைதானே!!ஹிஹி...)

மாலினி

எனக்குத்தெரியுமே!! தோசைகல்லு ரவுண்டா இருக்கறதால தோசையும் ரவுண்டா இருக்கு:-)

உருப்படியான பதில்: வட்டத்தோட surface-ல் இருந்து எந்த புள்ளிய எடுத்தாலும் அது வட்டதின் சென்டர்ல இருந்து சமமான தூரத்தில் இருக்கும்னு கணக்கு பாடத்துல சொல்வாங்க. அப்பதான் ஒரே சீராக வேகும்.
(இந்த பதில் சரியா? )

தோசைக்கல்லு ஏன் ரவுண்டா இருக்குன்னு காரணம் கண்டுபிடிச்சீங்கன்னா, அதுதான் இதுக்கும் பதில் :-)

நீங்க சொன்னது சரிதான். அதில இன்னும் கொஞ்சம் விளக்கம். நெருப்பு ஜுவாலை எப்போதும் நீள் வட்டவடிவில்தான் இருக்கும் (அது ஏன் ங்கிறது அடுத்த கேள்வி:-)) அதே போல் வெப்பம் பரவும்போது மையப்புள்ளியில் இருந்து எல்லா திசை நோக்கியும் ஒரே சீரா பரவும். இதற்கு சரியான வடிவம் வட்டம்தான். அதனாலேயே எல்லாப் பாத்திரங்களும் வட்டமாகவே தயாரிக்கப்பட்டது.

அவன் மாதிரியான உபகரணங்களில் எல்லாப் பக்கமிருந்தும் வெப்பம் சீராக வருவதால், உள்ளே வைக்கும் பாத்திரங்கள் வட்டமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கடைகளில் எல்லாம் தோசைக்கற்கள் செவ்வக வடிவில் வைத்திருப்பார்கள். கீழே நெருப்பும் குழாய்கள் வழியாக கல்லின் பலபாகங்களிலும் படுமாறு இருக்கும். அது ஒருவிதத்தில் வசதியாக இருந்தாலும், எரிபொருளை அதிகம் வீணடிக்கும்.

எதுவுமே நாம் செய்கிற கை பக்குவத்தில் தான் இருக்கௌ. யாருக்கும் உடனே தோசையோ, சப்பாதியோ சரியாக வராது, பழக பழகதான் வரும். ஒவ்வொரு தடவைசெய்ய்யும் போதும் என்ன தப்புபண்ணீருக்கிறோம் என்று கண்டுபிடிக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

அட்மின் அவர்களே கடைகளில் தோசைக்கல் சதுரமாக இருந்தாலும் தோசை என்னவோ வட்டமாகத்தான் ஊற்றுவார்கள்.
நான் நினைக்கும் காரணம் மாவை கரண்டியில் எடுத்து ஊற்றிவிட்டு வட்டமாக சுற்றுவது சுலபம், வாகாக இருக்கும், வேகமாக சுழற்ற முடியும்.
மற்ற வடிவங்களைக் கொண்டு வருவதற்குள் முதலில் ஊற்றிய இடம் வெந்துவிடும்.
சீராக வேக வைப்பதற்கும் வட்டம்தான் சரியான வடிவம்.
அன்புடன்
ஜெயந்தி

தோசை மாவை எடுத்து கல்லில ஊத்தினா, நீங்க தேய்க்காமலே விட்டாக்கூட அது வட்டமா பரவும். அதே முட்டையை உடைச்சு ஊத்துனீங்கன்னா (ஜெயந்தியக்கா, இது உங்களுக்கு இல்ல :-)) அது கன்னாபின்னான்னு பரவும். வட்டமா இருக்கிறதுல்ல.. அது ஏன்?

தோசைமாவு ஒரே சீரான அடர்த்தியுடன் இருக்கிறது. ஆனால் முட்டை! மஞ்சள் கருவும், முட்டையில் உள்ள வெள்ளை திரவமும் வேறு வேறு அடர்த்தியில் இருப்பதால் இருக்குமோ?

அன்புடன்
ஜெயந்தி

முட்டை சரியாக பார்த்து நல்ல அடித்து ஊற்றனும் அதுவும் நல்ல கை தேர்ந்தவர்கள் செய்த்தால் நல்ல வட்டமாகவரும்.
ஜலீலா

Jaleelakamal

வீட்டுல என்ன நடக்குது. யாரும் இல்லாத சமயம் பார்த்து அடுக்களையில முட்டை உடையுதோ :-)

நீங்க சொன்னது சரிதான். அடர்வு வித்தியாசம் இருக்கும். அதோட நாம ஊற்றும்போது கொடுக்கின்ற விசையும் சேர்ந்து அதை பரவியோட செய்யும். வெறும் வெள்ளைக்கருவையோ இல்லை மஞ்சள் கருவையோ, இல்லை இரண்டையும் ஓன்றாய் கலக்கியோ, ஒரு சமமான கல்லில் ஊற்றினால் அதுவும் வட்டமாகத்தான் பரவும். எந்த திரவமும் சமதளத்தில் ஊற்றப்படும்போது வட்ட வடிவில் தான் பரவும்.(வேறு விசைகள் எதுவும் அவற்றை உந்தக்கூடாது.)

வட்டமாக பரவுவதற்கும், பூமி உருண்டையாக இருப்பதற்கும், நாம் உயரத்தில் இருந்து பார்க்கும்போது நம்மை சுற்றி உலகம் வட்டமாக தெரிவதற்கும், அணுக்களின் அமைப்பிற்கும் சம்பந்தம் இருக்கின்றது.

அம்மணி அட்மினின் கேள்வி முட்டையை ஊத்தினா ஏன் வட்டமாகவரதில்லை என்பதுதான். அதுக்கு பதில் சொல்லுங்கம்மா

அன்புடன்
ஜெயந்தி

physics க்ளாஸ் கலந்துகிட்டா மாதிரி இருக்கு! எது எப்படியோ எனக்கு இந்த சப்பாத்தி ரோல் செய்து பார்க்கவெண்டும் போல் உள்ளது!