கச்சோடி

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. V. சரளா தேவி அவர்களின் கச்சோடி என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரளா தேவி அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா மாவு - கால் கிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
டால்டா - 50 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
சோம்புத் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
சோடா உப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

பாசிப்பருப்பைத் தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் தண்ணீரை நன்றாக வடிகட்டிவிட்டு, ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பைப் போடவும். அத்துடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், சோம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு இளம் சூட்டில் கிளறவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி பொடியாக நறுக்கிய மல்லித் தழையைப் போட்டு கிளறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, டால்டாவை உருக்கி ஊற்றி நன்றாகப் பிசையவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி உப்பு, சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மைதா மாவையும், கிளறி வைத்துள்ள பாசிப்பருப்புக் கலவையும் சமமான எண்ணிக்கையில் தனித்தனி உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு மைதா உருண்டையாக எடுத்து வட்டமாகத் தட்டி, அதற்குள் பாசிப்பருப்பு பூரண உருண்டையை வைத்து நன்றாக மூடி உருட்டவும்.
உருட்டியவற்றை வடை போலத் தட்டி வைக்கவும்.
பிறகு அவற்றை சூடான எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான கச்சோடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கச்சோடி சூப்பர்ங்க.. நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் ரேவா.. நிச்சயம் செய்துபார்கிறேன்.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பேரைப் பார்த்துட்டு நான் ஏதோ இனிப்பு வகைன்னு நினைச்சேன் ரேவ்ஸ். உள்ளவந்து பார்த்தா காரசாரமான‌ எங்காளுக்கு பிடித்த‌ ரெசிப்பி. சூப்பர்.படங்களும் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இது எப்படி இருக்கும்னு போன வாரம் தான் வெளிய போயிருந்தப்போ ரோட் சைட் பார்த்துட்டு இவரை கேட்டுக்கிட்டிருந்தேன் ;) அவசியம் செய்து பார்த்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தான்க்யூ ரேவ். ம்ம் சூப்பரா இருக்கும் ஈவினிங் டிபன்க்கு செய்ங்க. எண்ணெய்யும் அந்த அளவுக்கு குடிக்கல.

சுமி. ஒஹோ நீங்க காரபிரியர்ரா . நாங்க ஸ்விட் பிரியர்கள். நல்லாருக்கும் செய்து பாருங்க. சுமி தான்க்யூ

Be simple be sample

இது நானும் கடைல ஒருமுறைதான் சாப்பிட்டுக்கேன். நார்த் இண்டியன் டிஷ். அவங்க கடைலதான் இருந்தது. செய்துபாருங்க வனி. நல்லாருக்கும் தான்க்ஸ் வனி

Be simple be sample

கிச்சன் குயின் ரேவாக்கு அன்பான வாழ்த்துக்கள் ;) கச்சோடி சூப்பருங்கோ நானும் இதை செய்யனும்னு பல முறை நினைச்சுருக்கேன் அதுக்கு காரணம் என்ன தெரியுமா விஜய் டீவில ஒரு சீரியல்ல எப்ப பாத்தாலும் கச்சோடி செய்துட்டு இருப்பாங்க :P நார்த் இண்டியன் டிஷ்தான் இது சூரத் போனப்போ ட்ரெய்ன்ல விற்ப்பாங்க ஆனா வாங்கினதுல்ல.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீண்டும் கிச்சன் குயினாக மகுடம் சூடியிருக்கும் ரேவதிக்கு வாழ்த்துக்கள். கச்சோடி இதுவரை சாப்பிட்டது கிடையாது. ஆனால் செய்யனும்னு ரொம்ப ஆசை, ஆனால் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்னு ட்ரை பண்ணினது இல்லை. இனி உங்களோட விளக்கப்பட குறிப்பு பார்த்து கண்டிப்பா செய்துட வேண்டியதுதான்:-) எல்லா குறிப்பும் கலக்கலோ கலக்கல்.

விஜய் டிவி சீரியல் //என் கணவன் என் தோழன் தானே// க்ரைடா

கச்சோடி பார்க்கவே நல்லா இருக்கு. முயற்ச்சித்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

ஆமாம் செண்பகா அந்த சீரியல்லதான் எப்ப பாரு கச்சோடி செய்து ஆசைய கிளப்பி விடுவாங்க :p

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தான்க்யூ சுவா. ஆமா சுவா உறவுகள் தொடர்கதை சீரியல்லயும்.தான்க்யூ
..

செண்பகா செய்துபார்த்துட்டு சொல்லுங்க . தான்க்யூ
...

தர்ஷா தான்க்யூ

Be simple be sample