ஸ்ட்ராபெர்ரி ஜாம்

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

திருமதி. லாவண்யா அவர்களின் ஸ்ட்ராபெர்ரி ஜாம் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

சீனி - 2 கப்
லெமன் - 2
ஸ்ட்ராபெர்ரி - அரை கிலோ


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சமைக்க ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக, குளிர் சாதனப் பெட்டியில் வெறும் தட்டு ஒன்றைக் குளிர வைக்கவும். இறுதியில் ஜாம் பதம் கண்டுபிடிக்க இது தேவைப்படும்.
ஸ்ட்ராபெர்ரியின் காம்புப் பகுதியை நீக்கி, சிறிது குடைந்து விட்டு மீதியைப் பாதியாக நறுக்கி வைக்கவும். பெரிய பழங்களை நான்காக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாதி லெமனின் மேற்தோலை மட்டும் சுரண்டித் தனியே எடுத்து வைக்கவும். மீதியைச் சாறு பிழிந்து எடுக்கவும்.
பாத்திரத்தில் லெமன் சாறு, லெமன் செஸ்ட் மற்றும் சீனியைக் கலந்து, மெல்லிய தீயில் வைத்து சீனி கரையும் வரை (அண்ணளவாக 15 நிமிடங்கள்) கிளறவும்.
இவற்றோடு ஸ்ட்ராபெர்ரி துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும்.
இடையிடையே கிளறிவிடவும். தேவையானால் பெரியதாக உள்ள துண்டுகளைக் கரண்டியால் சிறிது மசித்துவிட்டுக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரி சேர்த்த 20 நிமிடங்களில் ஜாம் தயாராகி இருக்கும்.
குளிரூட்டியில் வைத்த தட்டில் சிறிது ஜாம் விட்டால், ஜெல் மாதிரி ஒட்டிக் கொள்ள வேண்டும். அது தான் சரியான பதம்.
ஜெல் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்கி, சூடாக இருக்கும்போதே சாடியில் விட்டு இறுக்கமாக மூடி வைக்கவும். அருமையான ஸ்ட்ராபெர்ரி மணத்துடன், இனிமையான ஸ்ட்ராபெர்ரி ஜாம் தயார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு அண்ணளவாக 500 மில்லி லிட்டர் ஜாம் கிடைக்கும். அதற்கேற்றபடி, முன்பே கண்ணாடிச் சாடிகளைத் தெரிந்து தயாராக வைக்கவும். பாப்சீல் மூடிகளுள்ள சிறிய கண்ணாடி பாட்டில்களைத் தெரிந்து முன்பாகவே அவற்றையும் மூடிகளையும் சுத்தமாகக் கழுவி வைக்கவும். அனைத்தையும் ஒருமுறை வெந்நீரில் அலம்பவும். சமைத்துக் கொண்டு இருக்கும் பொழுது அனைத்தையும் அவனில் வைத்து மெல்லிய சூட்டில் உலர விடவும். சூடாகியதும் அவனை அணைத்துவிட்டு அப்படியே விட்டு வைக்கவும். நிரப்பும் சமயம் பாட்டில்களை ஒரு மரத்தாலான வெட்டும் பலகையில் வைத்து நிரப்பவும். நிரப்புவதற்கு வேறு கரண்டி பயன்படுத்துவதானால் அவற்றையும் பாட்டில்களோடு அவனில் வைத்திருந்து எடுத்தால் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜாம் பார்க்கவே அருமையா இருக்குங்கம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்ட்ராபெர்ரி ஜாம் கலர்புல்லா பட்டைய‌ கிளப்புது இமாம்மா.. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நன்றி சுவர்ணா & சுமி.

வனி இந்த மாதிரி ஒரு விடயத்தை ஆரம்பித்து வைத்திருக்காவிட்டால் இந்தக் குறிப்பு என் கண்ணில் பட்டிருக்குமாவென்று தெரியவில்லை. சுலபமான குறிப்பாகத் தெரிந்தெடுத்தேன். ;) இப்போ இங்கே ஸ்ட்ராபெர்ரி சீஸன் வேறு. லாவண்யாவுக்கு ஒரு நன்றி. அவர் கொடுத்திருந்த அளவுகள் துல்லியமாக இருந்தன. முதல் முயற்சியிலேயே அருமையாக வந்திருக்கிறது. ஜாம் செய்வதற்காகவே மீண்டும் ஸ்ட்ராபெர்ரி வளர்க்கப் போகிறேன். :-)

நன்றி வனி. :-)

‍- இமா க்றிஸ்

இமா மேம், ஜாம் ரொம்ப‌ நல்லா இருக்கு. அதோட‌ ஜாம் சேகரிக்க‌ நீங்க‌ கொடுதிருக்கின்ற டிப்ஸ் ரொம்ப‌ உபயோகமாக‌ இருக்கு. இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

நான் என்ன பண்ணேன் இமா... குறிப்பு கொடுத்தவர்களுடையது, செய்வது நீங்கள், அதை அழகாக உங்களுக்காக வெளியிடுவது அறுசுவை டீம்... நடுவில் நான் வெறும் பட்டியலிடம் ஆள்... அதுவும் டீம் தேர்வு செய்து கொடுப்பதை பட்டியளிடும் ஆள். என் வேலை ஒன்றுமே இல்லை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாமே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....

:-) வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றிகள் பாலநாயகி.
ஒரு சின்ன வேண்டுகோள் - இந்த டார்லிங்கை விட்டுரலாமே! ப்ளீஸ்! :-)

‍- இமா க்றிஸ்

Jam super akka.apade thanga ....

plz chat