வெங்காய கொஸ்து

தேதி: January 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஞ்சுளா அரசு அவர்களின் வெங்காய கொஸ்த்து என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மஞ்சுளா அவர்களுக்கு நன்றிகள்.

 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
வரமிளகாய் - 2
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு
வறுத்துப் பொடிக்க:
வரமிளகாய் - 5
கடலைப்பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு


 

வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். புளியைச் சற்று நீர்க்கக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அத்துடன் புளிக் கரைசலை ஊற்றவும்.
புளி வாசனை போனதும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்துக் கிளறி, சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான வெங்காய கொஸ்து தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெங்காய‌ கொஸ்து சூப்பர்.டிபன் அயிட்டம்களுக்கு நல்ல‌ காம்பினேஷன். வாழ்த்துக்கள் அம்மிணி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.