இஞ்சி பக்கோடா

தேதி: January 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. துஷ்யந்தி அவர்கள் வழங்கியுள்ள இஞ்சி பக்கோடா குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 25 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 50 கிராம்
டால்டா - 25 கிராம்
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - அரை தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் இஞ்சியுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கடலை மாவு, ஆப்ப சோடா, உப்பு, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் (சோம்பு), டால்டா, தண்ணீர் மற்றும் இடித்த பச்சை மிளகாய், இஞ்சிக் கலவை ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கெட்டியாகப் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு நன்றாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான இஞ்சி பக்கோடா ரெடி. நீங்கள் சாப்பிட்ட உணவை மிகவும் எளிதில் ஜீரணமாக்கும் சத்துகள் நிறைந்த ஸ்நாக் இது.

டால்டாவிற்கு பதிலாக பட்டர் அல்லது மார்ஜரீன் (Margarine) பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினாக மீண்டும் மகுடம் ;) போன முறையை விடவும் படங்கள் ஜோரா வந்திருக்கு. முக்கியம இந்த பக்கோடா... என் கண்ணை ஈர்க்குது. அவசியம் செய்துட்டு சொல்றேன்... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இஞ்சி பக்கோடா சூப்பருங்கோ. இங்க‌ குளிர் பட்டையைகிளப்புது. சரியான் சமயத்தில‌ அருமையான‌ குறீப்பு கொடுத்து இருக்கீங்க‌ ..செய்துடுவோம். வாழ்த்துக்கள் .

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மிக்க நன்றி வனி :) செய்து பார்த்து சொல்லுங்க வனி, படங்கள் போன முறை டேப்ல எடுத்தேன் இம்முறை கேமராவில் எடுத்தேன் அதான் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி மிக்க நன்றிப்பா :) ஆமா சுமி குளிருக்கு ஏற்ற பக்கோடாதான் நானும் மழை சமயத்துல தான் செய்தேன் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.