சாமை சாம்பார் சாதம்

தேதி: January 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சாமை அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று (அ) சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிது
கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், உருளை, வாழைக்காய் கலந்து - ஒரு பெரிய கப்
சாம்பார் பொடி (மிளகாய் + தனியா) - 3 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

சாமை அரிசி மற்றும் துவரம் பருப்பைச் சுத்தம் செய்து ஊற வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து சிவக்கவிட்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய காய் கலவையைச் சேர்த்து (வதங்க அதிக நேரம் எடுக்கும் காய்களை முதலில் சேர்த்து சிறிது வதக்கிய பிறகு மற்ற காய்களைச் சேர்த்து வதக்கலாம்), தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அதனுடன் தூள் வகைகளைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிட்டு, 4 முதல் 4 1/2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி சிம்மில் 15 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். கடைசியாக நெய் விட்டு கலந்து கொள்ளவும்.
சுவையான சாமை சாம்பார் சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாமை சாம்பார் சாதம் சூப்பர் வனி. படங்கள் அழகு.கடைசி படம் ஜோரா இருக்கு...:) வரும் வாரத்தில் ட்ரை செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பரோ சூப்பரா இருக்கு. ஆனா எனக்கு தான் இப்டி செய்ற‌ அப்போ பதம் சரியா வர‌ மாட்டுது. ரொம்ப‌ ட்ரையா வரும். இந்த‌ தடவ‌ செய்து பார்த்துட்டு சொல்றேன். உங்க‌ சாதம் சூப்பர். அருசுவையோட‌ குயின் எப்பவும் நீங்க‌ தான்.

எல்லாம் சில‌ காலம்.....

சுமி & பாலா... மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க. பாலா, நீர் கொஞ்சம் அதிகம் வைங்க, அரிசிக்கு அரிசி மாறுபடும். வழக்கமா வைக்கும் அளவை விட கூட வைக்கணும். வழக்கமா 1 கப்புக்கு 2 கப்ன்னா இதுக்கு 5 கப் வரை வைக்கலாம். இல்லன்னா நேரமாக நேரமாக கெட்டியாகிப்போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டுடே lunch'க்கு உங்க‌ டிஷ் செய்ரேன்.எவ்லோ நேரம் அரிசி பருப்பு ஊர‌ வைக்கனும்?