பீட்ரூட் சாதம்

தேதி: January 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

அரிசி - 3 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
பீட்ரூட் - ஒன்று (சிறியது)
கேரட் - கால் பகுதி


 

தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அரிசியையும், பாசிப்பருப்பையும் கழுவி வைக்கவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு சிறிய குக்கரில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடியிட்டு 3 விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து நன்கு மசித்துவிடவும்.
குழந்தைகளுக்கான சத்தான பீட்ரூட் சாதம் தயார். விரும்பினால் நெய் சேர்த்து ஊட்டலாம்.

குழந்தைகளுக்கு ஆறு மாதம் முதல் இந்த சாதத்தைக் கொடுக்கலாம். நாங்கள் ஒரு வயது வரைக்கும் குழந்தைகளுக்கு உப்பு சேர்ப்பதில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அப்பாடா என் வீட்டு செல்லத்துக்கு சூப்பர் மம்மு ரெடி ஆகிடுச்சி. நைஸ் மம்மு வானி.

எல்லாம் சில‌ காலம்.....