சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட்

தேதி: January 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுஸ்ரீ அவர்களின் சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுஸ்ரீ அவர்களுக்கு நன்றிகள்.

 

சேப்ப‌ங்கிழ‌ங்கு - 5 (அ) 6 (நடுத்தரமான அளவு)
சாம்பார் பொடி - ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
க‌டலை மாவு - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீர‌க‌ம் - முக்கால் தேக்க‌ர‌ண்டி
பெருஞ்சீர‌க‌ம் (சோம்பு) - அரை தேக்க‌ர‌ண்டி
க‌றிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப‌
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி (அ) தேவையான அள‌வு


 

சேப்ப‌ங்கிழ‌ங்கைத் தண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்து அதிகம் குழைந்துவிடாமல் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலுரித்து, அரை அல்லது முக்கால் இன்ச் அளவுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சாம்பார் பொடியுடன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவைச் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, வேக வைத்த கிழங்கைப் போட்டு பிரட்டவும். (கிழங்கில் உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சிறிது உப்பும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்).
வாண‌லியில் எண்ணெய் ஊற்றி சூடான‌தும், க‌டுகு போட்டு பொரிந்ததும், பெருங்காய‌ம், சீர‌க‌ம், பெருஞ்சீர‌க‌ம் மற்றும் க‌றிவேப்பிலை போட்டு லேசாக‌ வ‌த‌க்க‌வும்.
பிறகு அத‌னுட‌ன் பிரட்டி வைத்திருக்கும் சேப்ப‌ங்கிழ‌ங்கைச் சேர்த்து சாம்பார் பொடியின் வாசனை போக வதக்கவும். நன்கு முறுக‌லாக வந்ததும் இறக்கவும்.
சுவையான சேப்ப‌ங்கிழ‌ங்கு ட்ரை ரோஸ்ட் த‌யார்.

இது ரசம் அல்லது த‌யிர் சாத‌த்துட‌ன் சாப்பிட‌ அருமையாக இருக்கும். எல்லா விதமான கலந்த சாத வகைகளுக்கும் பெஸ்ட் மேட்ச்சாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சேப்ப‌ங்கிழ‌ங்கு ட்ரை ரோஸ்ட் பார்க்கும் போதே ஜொள்ளு விட‌ வைக்குது. ஆனாலும் எனக்கு கிடைக்காத‌ பொருளை எல்லாம் செய்து காமிச்சு என்னைய‌ அழ‌ வைக்க‌ கூடாது ..:( போன‌ வாட்டி இந்தியா வந்தபோது சேப்பங்கிழங்கு சாப்பிட்டது...:( 1 கிலோ கிழங்கு பார்சல் பண்ணிவிடுங்க‌ ரேவ்ஸ். சூப்பரான‌ ரெசிப்பிக்கு டபுள் வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சேப்ப‌ங்கிழ‌ங்கு ட்ரை ரோஸ்ட் படமே நல்லா இருக்கும் என்று சொல்லுது!சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.