தயவு செய்து உதவுங்கள் காது வலி நான் 5 மாதம் கர்பம்

நேற்று இரவு முதல் ரைட் சைடு காது மிகவும் வலிக்கிறது. இதனால் இரவு முழுவதுமே தூக்கம் இல்லை. இன்று காலை டாக்டரிடம் சென்றேன் அவர் பாரசிடமல் ம்ற்றும் அலர்ஜி மாத்திரை கொடுத்தார் அதை போடுவதால் என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா? தயவு செய்து யாரவது வீட்டு வைத்தியம் சொல்லுங்க‌ ப்ளீஷ்... நான் என் கணவருடன் தனியாக‌ al ain ல் உள்ளேன் கருத்து சொல்லவும் யாரும் இங்கு இல்லை.

ப்ளீஷ் யாராவது உதவுங்கள். வலி உயிர் போகுது

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

Paracetamol onnum pannadhu. Dr ninga karpam nu therinju dhanae koduthanga tab? Appadi solli dhaan consult panningana bayapadama sapidunga. Indha neram veetu vaithiyam dhaan risk. Kaadhula een valinu sonnaangalaa?? Kuliraa anga?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டாக்டர் இன்ஃபெக்சன் ஆயிருக்குனு மட்டும் தான் சொன்னாங்க‌. பயங்கர‌ குளிர் இங்க‌.. இன்னும் வலி மட்டும் குறையவே இல்ல‌.. ரொம்ப‌ பயமா இருக்கு பாப்பா க்கு ஏதாவது இன்ஃபெக்ட் ஆய்டுமோனு.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

யு டியூப்பில் நாட்டு மருத்துவம் பகுதியில் பார்க்கவும் சன் டிவி சக்தி சுப்ரமணியம வீட்டு காய்கறிகள், கீரைகள், மசாலாப்பொருள்கள் கொண்டே மருந்துகள் குறிப்புகள் தருகிரார். அதைப்பாருங்கள். பின்னாலும் பயன்படும்.

அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//பாப்பா க்கு ஏதாவது இன்ஃபெக்ட் ஆய்டுமோனு.// நிச்சயம் ஆகாது. பயமில்லாமல் இருங்க. உங்களுக்கு வரும் இந்த மாதிரி சாதாரண இன்ஃபெக்க்ஷன் எல்லாம் குழந்தையைப் பாதிக்காது. டாக்டர் கொடுத்த மருந்தை எடுங்க. வீட்டு வைத்தியம் சாப்பிடுவதுதான் ரிஸ்க். காதை மறைத்து மஃப்ளர் கட்டிக்கோங்க. மூக்கை இழுக்கவோ கடுமையாகச் சீறவோ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்