கோபி மஞ்சூரியன்

தேதி: January 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 1
முட்டை - 1
மைதா மாவு - 4 பெரியகரண்டி
சோளமாவு - 4 கரண்டி
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
சோயா சாஸ் - 2 பெரியகரண்டி
பச்சைமிளகாய் - 2
மல்லிக்கீரை - 2 கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

காலிஃப்ளவரை 3 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
முட்டையை நன்கு கலக்கி அதில் இரண்டு மாவையும் சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
அதில் வேகவைத்த காலிஃப்ளவரை பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
எல்லாவற்றையும் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் அதே சட்டியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கவும்.
அதிலேயே சாஸை ஊற்றி கலக்கி ஒரு குவளை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் அதில் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு நன்கு கிளறி, மேலே மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hai,
ungal kurippai parthean. easyyaha ullathu. nalai seithu parkirean.
thankyou.....

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪