அவகோடா டிப்

தேதி: January 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. துஷ்யந்தி அவர்களின் அவகோடா டிப் என்ற குறிப்பு, இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உள்ளி (பூண்டு) - ஒரு பல்
அவகோடா - ஒன்று
கொத்தமல்லித் தழை - 2 இணுக்கு
உப்பு - 2 சிட்டிகை
எலுமிச்சைப் பழம் - பாதி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, உள்ளி (பூண்டு) ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அவகோடாவை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.
மசித்த அவகோடாவுடன் பொடியாக நறுக்கியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துவிட்டு உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து வைக்கவும்.
சிப்ஸுடன் பரிமாற, சுவையான அவகோடா டிப் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்