உருளைக்கிழங்கு பாஜி

தேதி: January 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. மைதிசா அவர்கள் வழங்கியுள்ள உருளைக்கிழங்கு பாஜி குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மைதிசா அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தக்காளி - 4
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கைத் தோலுரித்து நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, வெண்ணெயைப் போட்டு உருக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
வதக்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
பிறகு காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்து மிருதுவாகி, கெட்டியானதும் இறக்கிவிடவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Kq வாழ்த்துக்கள். சூப்பரா இருக்கு எல்லாமே. கலக்கல்

Be simple be sample

உருளைகிழங்கு பாஜி சூப்பரா இருக்கு. அனைத்து குறிப்புகளும் அருமை வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..