டோ நட்

தேதி: January 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜரீனா அவர்களின் டோ நட் குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜரீனா அவர்களுக்கு நன்றிகள்.

 

மைதா மாவு - 100 கிராம்
சீனி - 50 கிராம்
உருக்கிய வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
ட்ரை ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை கப்
முட்டை - ஒன்று
சாக்லேட் டிப்பிங் செய்ய :
கோகோ பவுடர் - அரை கப்
சீனி - கால் கப்
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஒரு இன்ச் அளவு வட்டமான மூடி - ஒன்று (அ) பிஸ்கட் கட்டர்
4 இன்ச் அளவில் வட்டமான பாட்டில் மூடி - ஒன்று


 

கால் கப் பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்டைக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
மைதாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
சீனியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.
பொடித்த சீனியுடன் வெண்ணெய் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளவும். அத்துடன் மைதா மாவு, முட்டை மற்றும் ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்
20 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து, ஒரு முறை பிசைந்து கொள்ளவும். மாவை ஒரு சாத்துக்குடி அளவு எடுத்து சப்பாத்தி பலகையில் வைத்து ஒரு இன்ச் உயரம் இருக்கும்படி திரட்டி, பெரிய வட்டமான மூடியினால் வெட்டிக் கொள்ளவும். பிறகு.நடுவில் சிறிய மூடியினால் வெட்டி கொள்ளவும். பார்ப்பதற்கு உளுந்து வடை போன்ற வடிவில் இருக்கும். இது போல மீதமுள்ள மாவிலும் தயார் செய்து கொள்ளவும்.
அவற்றைச் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். டோ நட் அழகாக பொங்கி வரும். எண்ணெயை வடித்து எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே மேலே பொடித்த சீனியை தூவிப் பரிமாறலாம்.
சாக்லேட் டிப்பிங் செய்ய சீனியில் அரை கப் தண்ணீர் விட்டு, கோகோ பவுடர், பட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
கலவை 10 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும். சாஸ் போல திக்காக இருக்க வேண்டும்.
ஒரு டோ நட்டை எடுத்து ஒரு முள்கரண்டியால் குற்றியெடுத்து, சாக்லேட் சாஸில் பாதி அளவிற்கு டிப் செய்து எடுக்கவும்.
சாக்லேட் கோட்டிங் மேலே இருக்குமாறு ஒரு ப்ளேட்டில் வைத்து ஆறியதும் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வடிவா இருக்கு தர்ஷா. சொக்லெட் கோட்டிங்... சுப்பர்ப்.

‍- இமா க்றிஸ்

சான்ஸே இல்ல. சூப்பரா இருக்கு

Be simple be sample

ரொம்ப சூப்பரா இருக்கு. செய்முறை ஈசியா தான் இருக்கு. நிச்சயம் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மீண்டும் மகுடம் சூடியமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் :) அழகாய் இருக்கு டோனட். எல்லா குறிப்புமே எப்பவும் போல பளிச் படங்களோடு நல்லா வந்திருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டோநட் அருமைய‌ இருக்கு தர்ஷ‌.. என் மகளுக்கு ரொம்ப‌ விருப்பமானது. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப நன்றி இமாம்மா.

நன்றி ரேவதி..

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி. செய்து பாருங்க..(fb ல படம் போட்ட நீங்க தானே)

வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Padam potadhu revathi s. Revathy p illa. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

super

பெயர். குழப்பம் அது தான் . இப்போ ஓகே..

நன்றி

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குங்க. ட்ரை பண்ணி பார்க்கணும்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

வருகைக்கு நன்றி. ட்ரை பண்ணி பாருங்க.

டோ நட் ரொம்ப‌ நல்லா கலர்ஃபுல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

டோ நட் அருமை.நல்லா செய்து இருக்கிங்க‌!.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.