கோழிச்சாறு

தேதி: January 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. செந்தமிழ்செல்வி அவர்களின் கோழிச்சாறு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய செந்தமிழ்செல்வி அவர்களுக்கு நன்றிகள்.

 

கோழிக் குஞ்சு - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பற்கள்
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோழியைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் (சின்ன கோழி கிடைக்கவில்லையென்றால், கோழிக் கறியையே சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்).
தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்தெடுத்து, நைசாகப் பொடி செய்து கொள்ளவும்.
அத்துடன் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்து வைத்திருக்கும் கோழி துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
கோழி வதங்கியதும் தக்காளி, அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வேக வைத்து 15 நிமிடங்கள் கழித்து திறக்கவும்.
சுவையான கோழிச்சாறு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அனைத்து குறிப்புகளும் அருமை.படம் எல்லாம் பளிச்சுன்னு தெளிவா இருக்கு. வாழ்த்துக்கள் வாணி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

vani selwyn akka,super