டயட் மோர்

தேதி: January 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்கள் வழங்கியுள்ள டயட் மோர் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.

 

பழைய சோற்றின் நீர் - 2 டம்ளர்
மசாலா இல்லாத எலுமிச்சை ஊறுகாய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
நாட்டு வெங்காயம் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கட்டி (தேவைப்பட்டால்) - 4


 

நீர் ஊற்றிய பழைய சோற்றைப் பிசைந்து விட்டு, அதிலுள்ள சோற்றை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
பழைய சோற்றின் நீருடன் மற்ற தேவையான பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய நீருடன் உப்பு மட்டும் போட்ட மசாலா இல்லாத எலுமிச்சை ஊறுகாயைப் பிசைந்துவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து கலந்து பரிமாறவும்.

இது கோடை வெயிலுக்கு மிக அருமையாக இருக்கும்.

வெண்ணெய் எடுத்த மோராக இருந்தாலும், பால் உணவு என்ற வகையில் மோர் அருந்த முடியாமல் டயட்டில் உள்ளவர்களுக்கு ஏற்ற மோர் இது. பழைய சோற்று நீர் சற்று புளித்திருந்தால் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்