www.arusuvai.com
சிக்கன் மஞ்சூரியன்
தேவையானப் பொருட்கள்
- கோழி - 1/4 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- சோளமாவு - 4 ஸ்பூன்
- சிகப்பு மிளகாய் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
- முட்டை - 1
- மைதா மாவு - 1 ஸ்பூன்
- எண்ணெய் - சுமார் 250 மில்லி
- உப்பு - 1 ஸ்பூன்
- =========================
- கிரேவி செய்வதற்கு:-
- பூண்டு பல் - 15
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை குடைமிளகாய் - 1
- சிக்கன் (மேக்கி) க்யூப் - 1/4 க்யூப்
- தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
- சோள மாவு - 2 டீஸ்பூன்
- சிகப்பு மிளகாய் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
- வெங்காயத்தாள் அல்லது மல்லிக்கீரை - சிறிது
- எண்ணெய் - 5 ஸ்பூன்
- உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை
- முதலில் கோழிகறியில் எலும்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- முட்டையை கலக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு,சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, கட் பண்ணி வைத்துள்ள கோழிகறியை அதில் புரட்டி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பிறகு அவற்றை பொன்னிறமாக மெதுவான தீயில் பொரித்து எடுக்கவும்.
- பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
- விருப்பத்திற்கேற்ப வெங்காயத்தாளையோ அல்லது மல்லிக்கீரையையோ பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மேக்கி க்யூப் அனைத்தையும் போட்டு கிளறவும்.
- சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக்கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிகறியையும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது மல்லிக்கீரையை அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.
- பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும்.