ப்ரோக்கலி சாலட்

தேதி: January 8, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நர்மதா அவர்கள் வழங்கியுள்ள புரோக்லி ஸலட் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய நர்மதா அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரோக்கலி - ஒன்று
ஆலிவ் ஆயில் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் ஃப்ளேக்ஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீஸ் - கால் கப்
மிளகுத் தூள்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ப்ரோக்கலியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காம்பு பகுதியையும் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் ஃப்ளேக்ஸைப் போட்டு வதக்கவும்.
பிறகு ப்ரோக்கலி துண்டுகளைப் போட்டு வதக்கி, உப்பு மற்றும் மிளகுத் தூளைப் போட்டு பிரட்டி மூடி வைத்து 4 - 6 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான ப்ரோக்கலி சாலட் தயார். சீஸ் தூவிப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்