பட்டி ஷு (பிரெஞ்சு பப்ஸ்)

தேதி: January 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயார் செய்த மாவு - 300 கிராம்
கோழி (எலும்பு எடுத்தது) - கால் கிலோ
வெங்காயம் - பாதி
வெள்ளை மிளகு தூள் - 1 1/2 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
முட்டை - இரண்டு
உப்பு - தேவையான அளவு


 

முதலில் இறைச்சியை கழுவிக் கொள்ளவும். வெங்காயத்தை அதனுடன் சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகுதூள், உப்பு, அஜினோமோட்டோ, முட்டை(ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்) இவைகளை எல்லாம் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
பின்பு தயார் செய்த மாவை தேய்த்துக் கொள்ளவும். ஒரு டம்ளரால் வட்டமாக வெட்டிக் கொள்ளவும்,
பின்பு அந்த வட்டத்தின் நடுவே இறைச்சி கலவையை வைத்து அதன் மேல் இன்னொரு வட்டத்தை வைத்து மூடி விரலால் ஓரங்களை அழுத்தி மூடவும்.
இவைகளை 220 டிகிரி ஃபாரன்ஹீட்டில் 30 நிமிடங்கள் அவனில் வைக்கவும்.
20 நிமிடம் வெந்த பின்பு, வெளியே எடுத்து மஞ்சள் கருவை நன்றாக கலக்கி பப்ஸ் மேல் எல்லா இடங்களிலும் பரவினாற் போல் தடவி மீண்டும் அவனில் வைக்கவும். சிவந்தபின்பு வெளியே எடுத்து சூடாக பரிமாறவும்.


பப்ஸ் செய்முறை ஏற்கனவே அறுசுவையில் இடம் பெற்றிருக்கிறது, அந்த பதத்தில் மாவு தயார் செய்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பை நான் செய்து பார்த்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.எனக்கும் செய்வதற்கு எளிதாக இருந்தது.என்னிடம் அஜினோமோட்டோ இல்லை,நான் அதை சேர்க்கவில்லை.அதை சேர்க்காமலும் நல்லா வந்தது.பின்னுட்டம் தாமதமாக கொடுப்பதற்க்கு மன்னிக்கவும்.

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!அப்புறம் இந்த குறிப்பு யாரும் சமைக்கலாம் பகுதியிலும் படத்துடன் இருக்கிறது

இந்த குறிப்பை படத்தை பார்த்து மறுபடியும் செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.மிக்க நன்றி!!