பட்டி ஷூ (பிரெஞ்சு பப்ஸ்)

தேதி: January 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

அறுசுவையில் இஸ்லாமிய உணவுக் குறிப்புகள் வழங்கிவரும், தற்போது பிரான்ஸில் வசித்து வரும்  திருமதி. ரஸியா  அவர்கள் வழங்கிய குறிப்பு. அவரது பக்கத்தில் ஏற்கனவே வெளியாகி உள்ள இந்தக் குறிப்பிற்கான செய்முறையை படங்களாக எடுத்து அனுப்பியுள்ளார். பார்த்தாலே சுவைக்க தோன்றும் இந்த பிரெஞ்சு பப்ஸை நீங்கள் அனைவரும் செய்து பார்க்கவும்.

பப்ஸ் மாவு தயாரிக்க, அரைக்கிலோ மைதாவிற்கு, சீனி 25 கிராம், டால்டா 25 கிராம், உப்பு 10 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டு, அதில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பப்ஸ் செய்முறை அறுசுவையின் பழையத் தளத்தில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மாவு தயாரிப்பு குறித்து மேலும் விபரங்கள் அறிய கீழ்கண்ட பக்கத்திற்கு செல்லவும்.

பப்ஸ் செய்முறை

தயார் செய்த பப்ஸ் மாவு - 300 கிராம்
கோழி(எழும்பு எடுத்தது) - கால் கிலோ
பெரிய வெங்காயம் - பாதி
வெள்ளை மிளகு தூள் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
முட்டை - இரண்டு
உப்பு - தேவையான அளவு

முதலில் இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கறியுடன் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் மிளகுத்தூள், உப்பு, அஜினோமோட்டோ, முட்டை (ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்) இவைகளை எல்லாம் சேர்த்து பிசைந்துக்கொள்ளவும்.
தயார் செய்த பப்ஸ் மாவை மெல்லிய சப்பாத்திப் போல் பெரிதாக தேய்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளரால் தேய்த்த மாவை வட்டமான துண்டுகளாக வெட்டவும்.
ஒரு வட்டத்துண்டின் நடுவே சிறிது இறைச்சிக் கலவையை வைத்து, அதன்மேல் மற்றொரு துண்டினை வைக்கவும்.
ஓரங்களை ஒரு விரலால் அழுத்தி மூடவும். விரல் பதித்த சுற்று வட்டம் பார்ப்பதற்கு பூப் போல் அழகாக இருக்கும். இதேபோல் அனைத்து துண்டங்களையும் செய்து கொள்ளவும்.
பின்னர் இவை அனைத்தையும் ஒரு ட்ரேயில் அடுக்கி, அதனை ஓவனில் வைத்து வேகவிடவும். 220 டிகிரி Fல் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
இருபது நிமிடத்திற்கு பிறகு ட்ரேயை வெளியே எடுத்து, பூரிப் போல் வெந்துள்ள அனைத்து பப்ஸ் மீதும், எடுத்து வைத்துள்ள முட்டை மஞ்சள் கருவினை தடவவும். பப்ஸின் அனைத்து பாகங்களில் படுமாறு தடவவும்.
ட்ரேயை மீண்டும் அவனில் வைக்கவும். மேலும் 10 நிமிடங்கள் அதே வெப்பநிலையில் வேகவிடவும். பப்ஸ் சிவந்தபின்பு வெளியே எடுத்து சூடாக சாப்பிடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

டியர் ரஸியாவிற்க்கு, பார்க்க மிகவும் அருமையான உள்ளது உங்களின் இந்த ஃபிரஞ்ச் பப்ஸ் செய்முறை. செய்துப் பார்க்க போகின்றேன் ஆனால் ஒரு சந்தேகம். பப்ஸின் உள்ளே வைக்கும் பூரணத்தை அரைத்து பச்சையாக வைத்தால் போதுமா?கொடுக்கப் பட்டுள்ள வெப்பத்தில் வெந்து அதிலுள்ள நீரை இழுத்துக் கொள்ளுமா என்று தயவு செய்துக் கூறவும்.காரணம் என்னுடைய அவன் சூடாவதற்க்கே அதிக நேரம் எடுக்கும்.நன்றி.

நலமாக இருக்கிறீர்களா?இறைச்சியை வேக வைக்காமல் தான் செய்யவேண்டும்,முட்டை சேர்வதால் மாவுடன் ஒட்டி சேர்ந்தால் போல் வரும்,இவ்வளவு வெப்ப நிலையில் தான் நான் செய்கிறேன் நன்றாக வெந்துவிடுகிறது நீங்கள் ஓவனை 220 சூடு வந்தபின்பு தான் டிரேயெய் ஓவனில் வைக்கவேண்டும் உங்கள் ஓவென் மெதுவாக சூடு ஏறினால் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள்,கொஞ்சம் நிமிடத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்
பொன்னிறமாக வரும்போது வெளியே எடுத்துவிடுங்கள்,நன்றி மேடம்.

டியர் ரஸியாவிற்க்கு, பதில் எழுதியதற்க்கு மிகவும் நன்றி. நீங்கள் கூறியதுப் போலவே நான் செய்துப் பார்க்கின்றேன்.ரிசல்ட்டையும் கட்டாயம் தெரிவிக்கின்றேன்.நன்றி.

நலமாக இருக்கிறீர்களா?செய்து பார்ப்பதாக சொன்னீற்கள் மிக்க நன்றி!

நீங்கள் வீட்டிலேயே செய்த பப்ஸ் மாவா? அல்லது ரெடிமேடாக
கடைகளில் கிடைக்கிறதா

sajuna

நான் ரெடி மேட் மாவு வைத்துதான் செய்தேன்,ஆனால் அருசுவையை பார்த்து நான் ஏற்க்கனவே செய்துள்ளேன்,ரெடிமேட் மாவு ஃபிரான்ஸில் கிடைக்கிறது!

உங்கள் மகளுக்கும் என்னுடைய பெயர் தானா அப்போ என்னை நீங்கள் மறக்கவே முடியாது.கடைகளில் என்ன பெயருடன் விற்க்கிறது.சொல்வீர்களா

sajuna

என்னிடத்தில் உள்ள மைக்றோவ் அவ்னில் கிரில் உள்ளது இதில் எப்படி வேகவைப்பது.

நலமா? உங்களுக்கு உடன் பதில் அளிக்க முடியவில்லை,இங்கு இதன் பெயர் pâte feuillette உங்கள் நாட்டில் எப்படி என்று தெரியவில்லை!

திருமதி ரஸியாவிற்க்கு, நேற்று தங்களின் இந்த சுவையான பப்ஸை செய்துப் பார்த்தேன். மிகவும் சுவையாகவும், செய்வதற்க்கு சுலபமாகவும் இருந்தது. ஆனால் நான் எதிர் பார்த்தபடியே அவெனின் வெப்பத்தில் தான் சிறிது மாற்றம் தேவைப்பட்டது. தங்களின் அவெனில் ஃபேரன்கிரீட்டிலேயே நன்கு வெந்து விட்டது. என்னுடயதில் 220 டிகிரி C ல், சென்டிகிரேட்டில் வைத்தபிறகு தான் வேக ஆரம்பித்தது. ரிசல்ட் மிக மிக அருமையாக இருந்தது. என்னுடைய மகளுக்கும் அவர்களுடைய காலேஜ் நண்பர்களுக்கும் கொடுத்து விட்டுள்ளேன்.மிக்க நன்றி டியர்.

நலமாக இருக்கிறீர்களா?தாங்கள் பப்ஸ்சை செய்துபார்த்து நன்றாக இருந்ததாக சொன்னீர்கள் நன்றி!இது சை முறை சுலபம்,மேலும் இதர்க்கு தேவயான பொருட்க்கள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டில் பயன்படுத்தும்பொருட்க்கள்,அதனால் அடிக்கடி சைய முடிகிறது,இது சின்ன சின்ன விஷேஷ தினங்களில் செய்வதற்க்கு ஏற்றது நான் எப்பழுதும் விஷேஷ காலங்களில் செய்ய தவருவதில்லை,தட்டில் சீக்கிரம் பறந்துபோவதும் ஒருக்காரணம்! செய்துபார்த்து பாராட்டியதக்கு மிக்க நன்றி!

hello
how are you.last time you will send my e mail but i can't go to palaiyathalam.please send me details.
thankyou.

www.arusuvai.com/gravy/-26k இந்த லின்க்கில் போய் பாருங்கள்

அன்புள்ள ரஸியா நலமா.பிள்ளைகள் நலமா. உங்கள் பப்ஸ் செய்தேன் நன்றாக இருந்தது. சுவையான பப்ஸ் ரெசிபி தந்ததுக்கு நன்றி. உங்களிடம் போனில் நன்றி சொன்னாலும் இங்கு சொன்னால் தானே நீங்கள் குறிப்பு கொடுத்ததுக்கு உங்களுக்கு சந்தோஷம் அதனால் தான் இங்கும் நன்றி சொல்கிறேன்.

அன்புடன் கதீஜா.