Peer kaala Marundhu immediately after delivery

Hi friends,
My due date is on 31st Jan...Please can anyone tell me the list of peer kaala marundhu to be taken immediately after normal delivery...

//marundhu to be taken immediately after normal delivery...// உண்மையைச் சொல்ல வேண்டுமானால்... பிரசவம் - நோய் அல்ல குழந்தை பிறந்ததும் மருந்து சாப்பிட. மருந்து எதுவும் தேவையிராது. ஆரோக்கியமான உணவு & சின்னச் சின்ன அப்பியாசங்கள் மட்டும் போதும். சிசேரியன் என்றால் அல்லது தாய் ஏதாவது பிரசவ நேரச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தால் அதற்கு ஏற்றபடி மருந்து எடுக்கத்தான் வேண்டும். மற்றப்படி //normal delivery// என்றால், நாளாவட்டத்தில் உடல் தானாக தன் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.

நீங்கள் கேட்பது என்னவென்று புரிகிறது. இந்த மருந்துகள் லேகியம் எல்லாம்.... இடத்தை, குடும்பத்தை ஒட்டிய வழக்கங்கள். சிலர் செய்யச் சொல்லுவதை வேறு சிலர் தப்பு என்பார்கள். உங்கள் குடும்பத்திலுள்ள மூத்தவர்களிடம் கேட்டு நடப்பதுதான் பொருத்தமாக இருக்கும் ரம்யா.

‍- இமா க்றிஸ்

அன்புள்ள‌ ரம்யா இறை அருளால் நல்ல‌ குழந்தை பிறக்க‌ இறைவனை வேண்டுகிறேன்.
பிரசவத்திற்குப் பிறகு பிரசவலேகியம் என்று பெரியவர்கள் வீட்டில் செய்து தருவார்கள். குறைந்தது 20 மருந்தாவது இருக்கும். அதற்கு நீங்கள் சித்தா அல்லது ஆயுர்வேத‌ மருந்து அரசு அங்கீகாரம் பெற்ற‌ கடைகளில் பிரசவ‌ லேகியம் என்று கேட்டாலே தருவார்கள். சாப்பிடும் முறை குறித்து குறிப்பு அதிலேயே இருக்கும்.
அந்த‌ மருந்தினால் கட்டாயம் உங்களுக்கும் குழ்ந்தைக்கும் பல‌ நன்மைகள் உண்டு,
அதுவும் இந்த‌ பனிக்காலத்தில் பிரசவலேகியம் சாப்பிடுவது மிக‌ மிக‌ நல்லது. குளிர் உங்கள் இருவரையும் தாக்காது. குறிப்பாக‌ ஜன்னி வராது. வாழ்த்துக்கள். மருந்து காரமென்று நீங்கள் உணர்ந்தால் அதனோடு பசு நெய் + நல்ல‌ தேன் கலந்து உண்ணவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Thanks a lot Imma and Poongothai

மேலும் சில பதிவுகள்