இனிப்பு கார புளிச்சட்னி

தேதி: January 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - ஆரஞ்சுப்பழ அளவு
சர்க்கரை - கால் கோப்பை + ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
வறுத்து பொடித்த சீரகம் - அரைத்தேக்கரண்டி
சுடுதண்ணீர் - இரண்டு கோப்பை
உப்புத்தூள் - கால்தேக்கரண்டி


 

புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து நன்கு கரைத்து திப்பிகள் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் வடிகட்டிய புளிக்கரைசலை ஊற்றி தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மேலும் கால் கோப்பை நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து பச்சைவாசனை நீங்கி கெட்டியாக ஆனவுடன் இறக்கி ஆறவைத்து பீங்கான் குப்பியில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
இந்த புளிச்சட்டினியை எண்ணெயில் பொரித்த காரமான சிற்றுண்டிகளுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பின் மனோஹரி மேடம், இந்த சட்னி நன்றாக இருந்தது. உங்களது வெஜ் சமோசாவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா :)

அன்பு தங்கை நர்மதா எப்படி இருக்கீங்க? ஆமாம் இந்த சட்னி சமோசா போன்ற டீப் ஃபிரைட் ஸ்னக்ஸ்களுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். இதை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி டியர்.

அன்பின் மனோஹரி மேடம், நான் நன்றாக உள்ளேன். நீங்கள் எப்பிடியிருக்கிறீர்கள்? தீபாவளிக்கு இதை செய்தேன். இந்த சட்னி வட இந்திய சுவையில் மிகவும் நன்றாக இருப்பதாக எனது கணவர் கூறினார். :) உங்களுக்குத்தான் நன்றி. மறுநாள் ஆலு பரதாவுடனும் சேர்த்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது.
-நர்மதா :)