இஞ்சி சாதம்

தேதி: January 12, 2015

பரிமாறும் அளவு: 2 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் இஞ்சி சாதம் என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

அரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
கறுவாப் பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லித் தழை
புதினா
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
அரைக்க:
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 3
பூண்டு - 5 பல்
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
முந்திரி - 5


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
அரைக்க வேண்டிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
தக்காளியைத் தனியாக அடித்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கறுவாப் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு பொரியவிடவும்.
அதனுடன் கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பிறகு அடித்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கவும்.
கழுவிய அரிசியும் அளவிற்கு உப்பும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.
வறுவல், அப்பளம், தயிர் பச்சடி போன்றவை இந்த இஞ்சி சாதத்திற்கு ஏற்ற துணை உணவுகள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினாக மகுடம் சூடி முகப்பை கலக்கறீங்க.. எல்லா படமும் பளிச்சுன்னு ரொம்ப அழகா இருக்கு இமா. என் குறிப்பும் இடம் பிடித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி :) மிக்க நன்றி. மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குயின்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பும் கொடுத்து இங்கு வந்து கருத்தும் தெரிவித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி வனி. :-)

‍- இமா க்றிஸ்