சிக்கன் நக்கேட்ஸ்

தேதி: January 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜுலைஹா அவர்கள் வழங்கியுள்ள சிக்கன் நக்கேட்ஸ் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

எலும்பு நீக்கிய கோழிக்கறி - அரைக் கிலோ
பூண்டு தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
ரொட்டித் தூள் - கால் கிலோ
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

கோழிக்கறியை சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொண்டு, அதனுடன் பூண்டு தூள், மிளகுத் தூள், ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து வைக்கவும்.
சிக்கன் துண்டுகள் ஊறியதும் ஒவ்வொன்றாக எடுத்து, முட்டையில் தோய்த்து ரொட்டித் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான சிக்கன் நக்கேட்ஸ் ரெடி. பிடித்தமான சாஸுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் நக்கேட்ஸ் நல்லாருக்கு. செய்முறை ஈசி யா இருக்கு.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela